முதல் முறையாக மிஸ் யூனிவர்ஸ் 2024 அழகிப்போட்டியில் சவுத் ஆரேபியா பங்கேற்க உள்ளது.
சவுதி அரேபியா சார்பில் ரூமி அல்கஹ்தனி என்ற 27 வயது மாடல் மிஸ் யூனிவர்ஸ் 2024 போட்டியில் பங்கேற்கிறார். இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சியில் பல மாற்றங்களை சவுதி மேற்கொண்டு வரும் நிலையில் முதல் முறையாக மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் அந்நாடு பங்கேற்கிறது.
ரூமி அல்கஹ்தனி-யை இன்ஸ்டிராகிராமில் ஒரு மில்லியன் நபர்கள் பின் தொடர்கிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான அழகிப் போடியில் அவர் பங்கேற்றார். மிஸ் மிடில் ஈஸ்ட் ( சவுதி அரேபியா ), மிஸ் அராப் வேர்ல்டு பீஸ் 2021, மிஸ் வுமென் ( சவுதி அரேபியா ) பட்டங்களை பெற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் “ உலகத்தில் உள்ள பல்வேறு கலாச்சாரங்களை நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். சவுதி அரேபியாவின் பாரம்பரியத்தை இந்த உலகிற்கு கடத்த விரும்புகிறேன்” என்று கூறினார்.
”தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“