/tamil-ie/media/media_files/uploads/2022/06/skincare-759-gettyimages.jpg)
Skin Care
முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற தோல் பிரச்சனைகள் இப்போது அதிகரித்து வருகின்றன. ஹார்மோன்கள், உணவு, மன அழுத்தம், சரியான தோல் பராமரிப்பு இல்லாமை என, முகப்பருக்கான காரணங்கள் பல இருக்கலாம்.
தோல் நிறமியான மெலனின் அதிகப்படியான உற்பத்தி அல்லது சேகரிப்பு காரணமாக கரும்புள்ளிகள் ஏற்படுகின்றன. இது தோலை கருமையாக்கும் ஒரு ஸ்கின் பிக்மெண்ட். கூடுதலாக, ஃப்ரீ ரேடிக்கல் சேதம்’ கரும்புள்ளிகளுக்கு வழிவகுக்கும்.
ஆனால், பிரச்சினை இயற்கையில் நீண்டகாலமாக இல்லாவிட்டால், இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தும் சில எளிய வைத்தியங்களை எப்போதும் முயற்சி செய்யலாம். பியூட்டி இன்ஃபுளூயன்சர் ஆஷ்னா கபூர், இன்ஸ்டாகிராமில் அத்தகைய ஒரு தீர்வைப் பகிர்ந்துள்ளார்.
"முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளுக்கு குட் பை சொல்லுங்கள்"
தேவையான பொருட்கள்
½ - தக்காளி (இயற்கையான க்ளென்சராக கருதப்படுகிறது, தக்காளி நச்சுகளை வெளியேற்றி சருமத்தை பளபளக்க உதவுகிறது)
1 டீஸ்பூன் – கடலை மாவு (எண்ணெய் சரும பிரச்சனைகள், டாக்ஸின்கள், டான், முகப்பரு பிரச்சனைகள் மற்றும் கரும்புள்ளிகள் போன்றவற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது சருமத்தின் அமைப்பை மேம்படுத்தி, இறுக்கமாக்கும்.)
1 தேக்கரண்டி – கற்றாழை ஜெல்
½ தேக்கரண்டி – கிரீன் டீ
செய்முறை
அனைத்தையும் மிக்சியில் சேர்த்து பேஸ்ட் செய்யவும். அதை முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து, சில நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். மாய்ஸ்சரைசர் அப்ளை செய்ய மறக்காதீர்கள்!
பேட்ச் சோதனை பரிந்துரைக்கப்படுகிறது.
எந்தவொரு ஃபேஸ் பேக்கிற்கும்’ நீண்ட கால முடிவுகளைக் காட்ட, குறைந்தது மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு தொடர்ந்து பயன்படுத்துவது அவசியம்.
நீங்கள் புதிதாக ஒரு அழகு பராமரிப்பு வழக்கத்தை தொடங்கினால், ஆரம்பத்தில் ஏழு நாட்களுக்கு ஒருமுறை செய்வது நல்லது. உங்கள் சருமம் அதற்கு செட் ஆனபின், நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.