FASTag, tollgate, journey, FASTag new rules, double payment, alert, SBI, State bank of india, FASTag news, FASTag news in tamil, FASTag latest news, FASTag latest news in tamil
SBI Fastag Login: மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் மே 15, 2020ல் வெளியிட்டுள்ள மேம்படுத்தப்பட்ட FASTag விதிகளின்படி, FASTag ஒட்டப்பட்டுள்ள வாகனத்தில் அது செயல்படாததாகவோ (non-functional) அல்லது செல்லாததாகவோ (invalid) இருந்தால், அந்த வாகனத்தின் உரிமையாளரிடம் அந்த வாகனத்தின் வகையைப் பொருத்து இரண்டு மடங்கு கட்டணத்தை அபராதமாக வசூலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
புதுப்பிக்கப்பட்ட விதி 2020 மே 15 அன்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட GSR 298 E அறிவிப்புக்கு (notification) இணங்க உள்ளது
Advertisment
Advertisements
சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் National Highways Fee (Determination of Rates and Collection) Rules, 2008 ல் திருத்தம் செய்வதற்காக 15 மே 2020 தேதியிட்ட GSR 298 E அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, FASTag பொருத்தப்படாத வாகனம், செல்லுபடியாகாத அல்லது செயல்படாத FASTag ஐ பொருத்தியுள்ள ஒரு வாகனம் நெடுஞ்சாலை சுங்க சாவடி மையத்தில் FASTag வாகனங்கள் செல்லக்கூடிய பாதையில் நுழைந்தால் அந்த வகை வாகனங்களுக்கு பொருந்தும் கட்டணத்தில் இரண்டு மடங்குக்கு சமமான கட்டணத்தை அபராதமாக செலுத்த வேண்டும், என ஒரு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
முன்பு, நெடுஞ்சாலை சுங்க சாவடி மையத்தில் FASTag பொருத்தப்பட்ட வாகனங்கள் மட்டும் செல்லக்கூடிய பாதையில் FASTag இல்லாத வாகனங்கள் நுழைந்தால், அந்த வாகனங்களுக்கு மட்டும் இந்த அபராதம் வசூலிக்கப்பட்டது.
இந்திய அரசு 15 டிசம்பர் 2019 முதல் FASTag ஐ கட்டாயமாக்கியது மேலும் இதுவரை நாட்டில் மொத்தம் 1.68 கோடி FASTag கள் வழங்கப்பட்டுள்ளது.
— State Bank of India (@TheOfficialSBI) May 18, 2020
அதிகப்படியான அபாராதம் செலுத்துவதை தவிர்க்க எஸ்பிஐ FASTag பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களும் சமீபத்திய FASTag வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
அனைத்து வகையான வாகனங்களுக்கும் FASTag வழங்குவதற்காக பாரத ஸ்டேட் வங்கி ரூபாய் 100/- ஐ வசூலிக்கிறது. இந்த தொகை அனைத்து வரிகளையும் உள்ளடக்கியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil