தற்போதைய சூழலில் பலருக்கும் சியாட்டிகா நரப்பு வலி பிரச்சனை உள்ளதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இவற்றை கண்டறிவது மற்றும் கட்டுப்படுத்தும் முறைகளை மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார்.
அதன்படி,
1. சியாட்டிகா நரம்பு வலி கால் முழுவதும் இருக்கும்.
2. இடுப்பு பகுதில் இருந்து சியாட்டிகா நரம்பு உருவாகிறது.
3. இடுப்பு பகுதியில் உள்ள தண்டுகள் அதை அழுத்தினால் வலி ஏற்படும்.
4. சியாட்டிகா வலி சில பகுதிகளில் மட்டுமே கூட வரலாம்.
5. இடுப்பு பகுதி வலியை அலட்சியமாக எடுக்கக் கூடாது
6. கீழே படுத்து முட்டியை மடக்காமல் காலை உயர்த்தும் போது வலித்தால், சியாட்டிகா இருப்பதை கண்டறியலாம்.
7. சாய்வாக அல்லாமல் நேராக அமர்ந்து பழக வேண்டும்.
8. இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தங்கள் வாகனத்தின், ஷாக் அப்சர்பர் சரியாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
9. நமது படுக்கை சீராக இருக்க வேண்டும்.
10. தரையில் பாய் விரித்து படுப்பது நல்லது.
11. வெறுந்தரையில் படுக்க கூடாது.
12. புளிப்பு சுவை உடைய உணவுகளை தவிர்க்க வேண்டும்.
13. குளிர்ச்சியான உணவுகளை சாப்பிட கூடாது.
14. வாய்வு தரக்கூடிய பொருள்களை சாப்பிடக் கூடாது.
15. சித்த மருத்துவதில் வர்ம சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
16. தைலங்களை சுடாக்கி வலி ஏற்படும் இடத்தில் தடவலாம்.
இது போன்ற செயல்முறைகளை கடைபிடித்தால் சியாட்டிகா வலியை குறைக்கலாம் என மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“