ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கு மேலாக உட்கார்ந்து இருப்பவர்களுக்கு மரணம் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம் என்றும் 22 நிமிடங்கள் மிதமான முதல் சக்தி வாய்ந்த உடல் பயிற்சி செய்தால் இந்த சாத்தியங்கள் குறையும் என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
’British Journal of Sports Medicine’ என்ற ஆய்வு இதழில் வெளியான ஆய்வு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது. அதிக நேரம் அமர்ந்து வேலை செய்யும் நபர்களுக்கு உடல் பருமன், இதய ரத்த குழாய்களை பாதிக்கும், விரைவில் மரணத்தை ஏற்படுத்தும் சிக்கலை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில் இதிலிருந்து தப்பிக்க நாம் வாரத்திற்கு 150 நிமிடங்கள் மிதமான முதல் கடுமையான உடல் பயிற்சி செய்ய வேண்டும். உதாரணமாக நல்ல நடை, தோட்ட வேலை, மலை ஏறுவது போல விஷயங்களை நாம் செய்யலாம்.
இந்த ஆய்வின் முடிவுகள் நமக்கு பல முக்கிய விஷயங்களை எடுத்து காட்டுகிறது. ஒரு நாளைக்கு 10 ½ மணி நேரங்களுக்கு குறைவாக அமர்ந்து வேலை செய்யும் நபர்கள் கூடுதலாக 10 நிமிடங்கள் உடல் பயிற்சி செய்தால் மரணிக்கும் வாய்ப்பு 15% குறைவாக உள்ளது. 25 நிமிடங்கள் உடல் பயிற்சி செய்தால், இதுவே 10 ½ மணி நேரத்திற்கு அதிகமாக அமர்ந்து பணியாற்றும் நபர்களுக்கு இறக்கும் சதவிகிதம் 35% ஆக குறைந்துள்ளது.
அதிக நேரம் அமர்வதால் ஏன் சீக்கரமாக இறப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது?
அதிக நேரம் அமர்ந்து இருந்தால், உடல் எடை அதிகரிப்பது, இருதய ரத்த குழாய்களை பாதிக்கும் நோய், டைப் 3 டயபடிஸ், சில வகை புற்று நோய் ஏற்படலாம்.
தொடர்ந்து அமர்ந்து இருந்தால், நமது தசைகள் செயலிழக்கும், மெட்டபாலிசம் குறையும், ரத்த ஓட்டம் மோசமாகும், வீக்கம் அதிகரிக்கும் இதனால் மரணம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
25 நிமிடங்களில் உடல் பயிற்சில் நாம் என்ன செய்ய வேண்டும் ?
நாம் 15 நிமிடங்கள் நல்ல நடை பயிற்சி செய்ய வேண்டும் . இது இதய ரத்த குழாய்களை பாதிக்கும் நோயிலிருந்து நம்மை காப்பாற்ற முடியும். இதுபோல 15 நிமிடங்கள் ’ strength training’ என்று அழைக்கப்படும் வலிமையை அதிகரிக்கும் உடல் பயிற்சி செய்ய வேண்டும். வாரத்தில் 2 முறை இது இரண்டையும் செய்ய வேண்டும். குறிப்பாக 30 வயது மற்றும் அதற்கு மேலாக உள்ளவர்கள் இதை நிச்சயம் செய்ய வேண்டும்.
உடலில் உள்ள கொழுப்புகள் குறைவான தசைகள் 30 வயதிற்கு மேலாக குறையத்தொடங்கும். 8 % அளவு குறையத் தொடங்கும்.
Read in English
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“