/indian-express-tamil/media/media_files/2025/10/10/download-21-2025-10-10-18-18-12.jpg)
வீட்டு தோட்டம் என்றாலோ, மாடித் தோட்டம் என்றாலோ, நம்மால் முதல் நிலையில் வளர்க்க விரும்பப்படும் செடியாக இருப்பது ரோஜா செடி தான். செம்பு, மஞ்சள், வெள்ளை என பலவிதமான வண்ணங்களில் மலரக்கூடிய இந்த ரோஜா பூக்கள் தோட்டத்துக்கு அழகு சேர்க்கும் வகையில் இருந்தாலும், பலருக்குத் தோன்றும் பிரச்சனை – “மொட்டுக்கள் வைக்க மாட்டேங்குது!”
ஒரு ரோஜா செடியை வாங்கி நட்டபின், அதில் சுலபமாக 10, 12 மொட்டுக்கள் தோன்ற வேண்டும் என்றால், சில முக்கியமான பராமரிப்பு முறைகளையும், இயற்கையான உரவளிக்கையான கரைசலையும் பயன்படுத்த வேண்டும் என்பதே நிபுணர்களின் கருத்து.
ரோஜா செடியை எப்படி சரியாகத் தேர்வு செய்வது?
- ரோஜா செடி வாங்கும்போது பெரிய, பல கிளைகள் உள்ள செடிகளை தேர்வு செய்ய வேண்டும்.
- இலைகளில் பூச்சி தாக்கம் இல்லாதது என்பது அவசியம்.
- வலுவான வேர் அமைப்புள்ள செடி விரைவில் வளரக்கூடியதாக இருக்கும்.
மண் கலவை தயாரிக்கும் முறைகள்:
- தோட்ட மண்
- கோக்கோ பீட்
- மண்புழு உரம்
இந்த மூன்றையும் சம அளவில் கலந்து, தொட்டியில் போட வேண்டும். பிறகு ரோஜா செடியை நடும் போது, செடியின் மூலத்துடன் இருக்கும் பழைய மண்ணையும் சேர்த்தே நட வேண்டும். இது செடியின் வேர் வசதியாக நிலத்தில் பசும்படி உதவும்.இதுகுறித்து சில பயனுள்ள தகவல்களை இங்கே காணலாம்.
தண்ணீர் இடும் முறை
தோட்ட செடிகளின் வளர்ச்சிக்கு நீர்வரத்து மிக முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் தினமும் தண்ணீர் கொடுப்பது அவசியம். இது செடிகளுக்கு தேவையான ஈரப்பதத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. நீர் அளவு அதிகமாகவோ குறைவாகவோ இல்லாமல், செடியின் அளவுக்கும், மண் வகைக்கும் ஏற்ப சீரான முறையில் thaneer ஊற்ற வேண்டும். நீரின் மிகை வேர்களை அழுக்கச் செய்யும்; குறைவான நீர் செடியின் உலர்ச்சியை ஏற்படுத்தும். எனவே, ஒவ்வொரு நாளும் ஒழுங்கான நேரத்தில், சரியான அளவிலான நீர் வழங்குவது மிக முக்கியம்.
மொட்டுக்கள் அதிகம் வைக்க வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய பழக்கரைசல்
இந்த இயற்கை உரக்கரைசலை வாரத்தில் ஒரு முறை சேர்க்கும்போது, ஒரே கிளையில் 10-12 மொட்டுக்கள் வரை தோன்ற வாய்ப்பு உள்ளது!
தேவையான பொருட்கள்:
வாழைப்பழத் தோல் – 4
டீத்தூள் – 1 மேஜைக் கரண்டி
வெங்காயத்தோல் – 3 வெங்காயத்திலிருந்து எடுத்தது
தண்ணீர் – அரை லிட்டர்
செய்முறை:
வாழைப்பழத் தோலை சிறிய துண்டுகளாக நறுக்கி, டீத்தூள், வெங்காயத் தோலுடன் அரை லிட்டர் தண்ணீரில் நன்றாக கொதிக்க விடவும்.
கொதித்ததும், பாத்திரத்தை மூடி வைத்து 24 மணி நேரம் ஆற விட வேண்டும்.
பின் நன்கு வடிகட்டி, 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து, ஒவ்வொரு ரோஜா செடிக்கும் 200 மில்லி வீதம் ஊற்றவும்.
இந்த கரைசலைப் பயன்படுத்தும் பலன்கள்:
- செடியின் வளர்ச்சி வேகம் அதிகரிக்கும்
- இலைகள் பசுமையாகவும் ஆரோக்கியமாகவும் மாறும்
- மொட்டுக்கள் வைக்கும் அளவு அதிகரிக்கும்
- பூக்கள் நிறம், நறுமணம் மேம்படும்
இந்த இயற்கை உரக்கரைசல் ரோஜா செடிக்கு மட்டும் அல்ல, அனைத்து வகை பூச்செடிகளுக்கும் பயன்படுத்தலாம். இது வேர் வளர்ச்சிக்கும், கிளை பிரிவுக்கும் உதவியாக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.