ஆஸ்பத்திரி செலவு மிச்சம்... இந்த பாத்திரங்களில் சமைத்தால் நோய் எட்டிப் பார்க்காது; தெரிஞ்சுக்கோங்க!

இன்சுலேஷன் பிராபர்டி காரணமாக வெப்பம் மற்றும் குளிர்ச்சியை நீண்ட நேரம் பராமரிக்க முடியும். இதனால் உணவில் உள்ள கால்ஷியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நமக்குத் தக்க முறையில் கிடைக்கும்.

இன்சுலேஷன் பிராபர்டி காரணமாக வெப்பம் மற்றும் குளிர்ச்சியை நீண்ட நேரம் பராமரிக்க முடியும். இதனால் உணவில் உள்ள கால்ஷியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நமக்குத் தக்க முறையில் கிடைக்கும்.

author-image
Mona Pachake
New Update
download (56)

சமையலறைகளில் இன்று கிடைக்கும் பாத்திரங்கள் பழைய சமையல் மரபை மீறி, பல வகை மெட்டல் மற்றும் செராமிக் கலவைகளால் தயாரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில், ஆரோக்கியமான சமையலை விரும்பும் நவீன குடும்பங்களுக்கு, எந்த Cookware களை தேர்வு செய்ய வேண்டும் என்பது ஒரு பெரிய கேள்வியாகும். பழைய சமையல் மரபில் இருந்த மண் சட்டிகள், இரும்பு பாத்திரங்கள் இன்னும் முக்கியத்துவம் பெறுகின்றன.

Advertisment

நாம் இன்று உங்களுக்கு 4 டாப் Cookware வகைகள் மற்றும் அவற்றின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி விரிவாக விளக்குகிறோம்.

1. மண்பாண்டங்கள் (Earthenware vessels)

மண்பாண்டங்கள் எந்த சந்தேகமுமின்றி 100% இயற்கையான சமையல் பாத்திரமாக விளங்குகின்றன. இதில் உள்ள மைக்ரோபோரஸ் (Microporous) நுண் துளைகள் உணவை ஆரோக்கியமாக சமைக்க உதவுகிறது.

மேலும் இன்சுலேஷன் பிராபர்டி காரணமாக வெப்பம் மற்றும் குளிர்ச்சியை நீண்ட நேரம் பராமரிக்க முடியும். இதனால் உணவில் உள்ள கால்ஷியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நமக்குத் தக்க முறையில் கிடைக்கும்.

Advertisment
Advertisements

மண்பாண்டங்கள் சற்று கனமாக இருப்பதால், புதியதாக பயன்படுத்தும் போது சிறிது எண்ணெய் தேவைப்படுகிறது. ஆனால் பழகினால், குறைவான எண்ணெயில் சமைக்கும் உணவுகள் ருசியுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

2. வார்ப்பு இரும்பு பாத்திரங்கள் (Cast iron vessels)

இன்றைய பெண்களில் இரும்பு சத்து குறைபாடு அதிகமாக உள்ளது. வார்ப்பு இரும்பு பாத்திரங்களில் சமையல் செய்தால், உணவில் இரும்பு சத்து கலந்து உடலில் ஹீமோகுளோபின் அளவை சரியாக வைக்க உதவும்.

வார்ப்பு இரும்பு பாத்திரங்கள் பல சமையலுக்கு உகந்தது, வெப்பத்தை நிலைநிறுத்தவும், சத்துக்களை பாதுகாப்பதற்கும் சிறந்தவை. காலத்திற்கு முறையாக பராமரித்து பயன்படுத்தினால், இது சமையலறையின் Work Horse போல நம்பிக்கையான துணை ஆகும்.

3. ஃபுட் கிரேட் ஸ்டெய்ன்லெஸ் ஸீல் (Food Grade Stainless Steel)

இந்த பாத்திரங்கள் அயர்ன், நிக்கல், குரோமியம் கலவையால் தயாரிக்கப்பட்டுள்ளது. சமையலின் போது குரோமியம் ஆக்சைடு (Chromium Oxide) ஒரு பாதுகாப்பான லேயர் உருவாக்கி, உணவின் சுத்தத்தையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.

  • குரோமியம் அளவு 14–18%
  • பாக்டீரியாக்கள் ஒட்டாது
  • பராமரிப்பு எளிது
  • அனைத்து வகை சமையலுக்கும் பொருத்தம்

கவர்மேல் 300 அல்லது 400 என்ற சீரியல் எண் கொண்ட பாத்திரங்கள் மட்டுமே உண்மையான ஃபுட் கிரேட் ஆகும்.

4. பீங்கான் / செராமிக் & கிரானைட் பாத்திரங்கள் (Ceramic & Granite vessels)

பீங்கான் பாத்திரங்கள் உணவை கெடுக்காமல் பாதுகாக்கும் தன்மை கொண்டவை. இதை 100% ஆரோக்கிய சமையலுக்கு பயன்படுத்தலாம்.

  • ஆனால் அதிக கனத்துடனும், விலை அதிகமாய் இருக்கின்றது
  • எளிதில் உடையக்கூடியது
  • சில பாத்திரங்களில் அலுமினியம் மேல் கோட்டிங் உள்ளது, இது நீங்கி உணவில் கலந்து செல்லும் ஆபத்தை ஏற்படுத்தலாம்

இதுபோன்ற பாத்திரங்களில் நாம் சுத்தம் செய்து பராமரித்து பயன்படுத்த வேண்டும்.

சுருக்கமாக:

  • மண்பாண்டங்கள், வார்ப்பு இரும்பு பாத்திரங்கள், ஃபுட் கிரேட் Stainless Steel மற்றும் பீங்கான் பாத்திரங்கள் நவீன ஆரோக்கிய சமையலுக்கு சிறந்தவை.
  • பராமரிப்பு மற்றும் சுத்தம் முக்கியம்
  • நமது உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்க, உண்மையான Cookware களை தேர்வு செய்ய வேண்டும்

இந்த 4 வகை குக்வெர் கள், பழைய மரபையும் நவீன ஆரோக்கியத்தையும் இணைக்கும் சிறந்த தீர்வாக உள்ளன.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: