/indian-express-tamil/media/media_files/2025/05/11/7KdDLty2umNiOvl3NxPL.jpg)
Not sugar, not alcohol — is this the worst item for your liver health?
சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் நமது நீண்ட கால ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் எவ்வாறு தீங்கு விளைவிக்கும் என்பது குறித்து விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், எண்ணெய் வித்துக்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்கள் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
பொதுவாக சர்க்கரை மற்றும் மது அருந்துவது கல்லீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளில் முக்கியமானவை. ஆனால் இந்த விஷயத்தில், எண்ணெய் வித்துக்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்கள் அவைகளை பின்னுக்குத் தள்ளி முன்னணியில் வந்துள்ளனவா? இதுகுறித்து சுகாதார நிபுணர்களிடம் indianexpress.com பேசியபோது அவர்கள் சில பதில்களைத் தெரிவித்தனர். மேலும் இதற்கான மாற்றுகளையும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
பெங்களூரு ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனையின் மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை சேவைகளின் தலைவர் எட்வினா ராஜ் கூறுகையில், சூரியகாந்தி, குங்குமப்பூ, பருத்தி போன்ற சில எண்ணெய் வித்துக்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய்களில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளன.
இவை லினோலிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை உடலுக்கு அவசியமானவை என்றாலும், அதிகப்படியான நுகர்வு உடலில் வீக்கத்தை அதிகரிக்கலாம். உடலில் மற்றும் குடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 ஆகியவற்றின் சரியான விகிதத்தைப் பேணுவது மிகவும் முக்கியம். மேலும், எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது வீக்கம் மற்றும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இது காலப்போக்கில் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் கூறினார்.
திருவனந்தபுரம் கிம்ஸ்ஹெல்த் மருத்துவமனையின் இரைப்பை குடல் மருத்துவ ஆலோசகர் டாக்டர் சிம்னா எல் இதை ஒப்புக்கொண்டார். அதிக அளவில் இந்த எண்ணெய்களை உட்கொள்வது கல்லீரலில் வீக்கம் மற்றும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இது கல்லீரல் பாதிப்பு மற்றும் நோய்க்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார். "இருப்பினும், எல்லா எண்ணெய் வித்துக்களும் ஒரே மாதிரியானவை அல்ல. ஆளி விதை எண்ணெய் மற்றும் சியா விதை எண்ணெய் ஆகியவை ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை. இவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
சர்க்கரை அல்லது மதுவை விட மோசமானவையா?
"ஒமேகா-6 அதிகம் உள்ள எண்ணெய் வித்துக்களின் எண்ணெய்களுடன் அதிகப்படியான பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகள் மற்றும் மதுபானங்களை உட்கொள்வது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நிச்சயமாக நல்லதல்ல. இது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் கல்லீரலில் கொழுப்பு படிதல் போன்ற கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கும்" என்று ராஜ் கூறினார். மேலும், பொரித்த மற்றும் வணிக ரீதியாக தயாரிக்கப்பட்ட பேக்கரி பொருட்களில் காணப்படும் டிரான்ஸ் கொழுப்புகள் கல்லீரல் வீக்கம் மற்றும் சேதத்துடன் தொடர்புடையவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ராஜ் மேலும் கூறுகையில், எண்ணெய் வித்துக்களின் எண்ணெய்கள் மட்டுமே மோசமானவை என்று கூற முடியாது. ஏனெனில் ஒட்டுமொத்த உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் கல்லீரல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. அவை மட்டுமே குற்றவாளிகள் இல்லையென்றாலும், அதிகப்படியாக உட்கொள்ளும்போது ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகளை நிச்சயமாக அதிகரிக்கலாம்.
நீங்கள் என்ன மாற்றுகளை ஏற்றுக்கொள்ளலாம்?
டாக்டர் சிம்னா கூறுகையில், எண்ணெய் வித்துக்களின் எண்ணெய்களின் பதப்படுத்தும் மற்றும் உற்பத்தி முறைகளையும் கருத்தில் கொள்வது முக்கியம். ஏனெனில் சில எண்ணெய்கள் மற்றவற்றை விட அதிக சுத்திகரிக்கப்பட்டதாகவோ அல்லது பதப்படுத்தப்பட்டதாகவோ இருக்கலாம். கல்லீரல் ஆரோக்கியம் குறித்து கவலைப்படுபவர்களுக்கு உயர்தர, குறைந்தபட்சம் பதப்படுத்தப்பட்ட எண்ணெய் வித்துக்களின் எண்ணெய்களைத் தேர்ந்தெடுப்பது சிறந்த தேர்வாக இருக்கலாம்.
சிறந்த கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, எண்ணெயை மீண்டும் சூடுபடுத்துவதை தவிர்க்கவும். மேலும் அரிசி தவிட்டு எண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் போன்ற எண்ணெய்களின் கலவையை மிதமான அளவில் சேர்த்துக்கொள்ள பரிந்துரைத்தார். இந்த எண்ணெய்களை வதக்குவது முதல் பேக்கிங் வரை பல்வேறு சமையல் முறைகளில் பயன்படுத்தலாம், ஆரோக்கியத்தில் சமரசம் செய்யாமல் வெவ்வேறு வகைகளை வழங்குகிறது.
Read in English: Not sugar, not alcohol — is this the worst item for your liver health?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.