உடல் சூட்டை தணித்து, ஆரோக்கியம் நிறைந்தது கம கம சீரகத் துவையல் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சீரகம் – கால் கப்
இஞ்சி – சிறிதளவு
சின்ன வெங்காயம் – 5
புளி – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 5
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாயை சேர்த்து வதக்கவும். அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட்டு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். அவ்வளவு தான் கம கம சீரக துவையல் ரெடி. தேவைப்பட்டால் கடுகு, கறிவேப்பிலை, கடலைப் பருப்பு சேர்த்து தாளித்து சேர்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“