நாம் காய்ச்சல், இருமல், உடல் வலி, குழந்தை பெற்ற பெண்களுக்கு இந்த செலவு ரசம் வைத்து குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்
2 தக்காளி
5 பூண்டு
5 சின்ன வெங்காயம்
1 கொத்து கருவேப்பிலை
1 வத்தல் மிளகாய்
கொத்தமல்லி சிறிதளவு
1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணய்
கடுகு
உப்பு
மிளகு 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
1 டேபிள் ஸ்பூன் மல்லி
கால் ஸ்பூன் மஞ்சள்
செய்முறை:
ஒரு மிக்ஸியில் பூண்டு, சின்ன வெங்காயம், மல்லி, சீரகம், வர மிளகாய், மஞ்சள் பொடி, தக்களி நறுக்கியது சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் அரைத்ததை மாற்றி, அதில் தண்ணீர் சேர்க்கவும். கலந்துவிடவும். தொடர்ந்து இதில் உப்பு கொத்தமல்லி சேர்த்து கிளரவும். இந்த ரசத்தை அடுப்பில் வைக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் கடுகு, கொத்தமல்லி, கருவேப்பிலை, ஒரு வத்தல் சேர்த்து தாளித்து ரசத்தில் கொட்டவும். தொடர்ந்து ரசம் கொதித்து வரும்போது, இதை சேர்க்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“