வயசானாலும் இதுவும் முக்கியம்… கொஞ்சம் கவனம் செலுத்துங்க; டாக்டர் சுதா சேஷய்யன்
இளமைப் பருவத்தில் நீளமான கூந்தல் காற்றில் பறந்தாலும், முகத்தின் மீது விழுந்தாலும் அது ஸ்டைலாகவும் ஃபேஷனாகவும் தோன்றும். ஆனால், வயதாகும் போது நிலைமை வேறுபடுகிறது.
இளமைப் பருவத்தில் நீளமான கூந்தல் காற்றில் பறந்தாலும், முகத்தின் மீது விழுந்தாலும் அது ஸ்டைலாகவும் ஃபேஷனாகவும் தோன்றும். ஆனால், வயதாகும் போது நிலைமை வேறுபடுகிறது.
வயசானாலும் இதுவும் முக்கியம்… கொஞ்சம் கவனம் செலுத்துங்க; டாக்டர் சுதா சேஷய்யன்
வயதாக ஆக நமது உடல்நலத்திலும், வெளித் தோற்றத்திலும் சில மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. குறிப்பாக, நமது கூந்தல் பராமரிப்பில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இளமைப் பருவத்தில் நீளமான கூந்தல் காற்றில் பறந்தாலும், முகத்தின் மீது விழுந்தாலும் அது ஸ்டைலாகவும் ஃபேஷனாகவும் தோன்றும். ஆனால், வயதாகும் போது நிலைமை வேறுபடுகிறது.
Advertisment
வயதான கூந்தலுக்கு ஏன் அதிக கவனம் தேவை?
வயதாகும்போது கூந்தல் வறண்டு, மெலிந்து, அதன் நீளமும் குறைந்து போகும். இந்நிலையில், கூந்தல் கலைந்து பறக்கும்போது, சோர்வாகவும், பராமரிப்பற்றதாகவும், 'யாரும் இவர்களைக் கவனிக்கவில்லை' என்பது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்திவிடலாம். இது, நாம் சிறு வயதில் கனவு கண்ட 'நல்ல அப்பியரன்ஸ்' என்ற பிம்பத்திற்கு எதிரானது. இளம் வயதில் நாம் விரும்பிய தோற்றத்தை பராமரிக்க சில நேரங்களில் வாய்ப்பின்றிப் போயிருக்கலாம். "அப்போது தெரிந்திருந்தால் நான் இன்னும் அழகாக இருந்திருப்பேனே!" என்று நீங்கள் நினைக்கலாம்.
உங்கள் வயதிற்கேற்ப கூந்தல் பராமரிப்பில் சற்று அதிக கவனம் செலுத்துங்கள். கூந்தல் வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ளவும், மெலிந்து போகாமல் இருக்கவும் சரியான பராமரிப்பு முறைகளை கடைபிடிக்கவும். உங்களை சோர்வாகக் காட்டாமல், எப்போதும் புத்துணர்ச்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் வைத்திருக்க உதவும் என்கிறார் டாக்டர் சுதா சேஷய்யன்.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.