மார்பக புற்றுநோய்... வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி? டாக்டர் சுகன்யா அனந்தராமன் டிப்ஸ்
பெண்கள் அதிகமாக பாதிக்கப்படும் மார்பக புற்றுநோயை எவ்வாறு ஆரம்ப கட்டத்தில் வீட்டிலேயே கண்டறியலாம் என்று மருத்துவர் சுகன்யா அனந்தராமன் விளக்கம் அளித்துள்ளார். அதனை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
பெண்கள் அதிகமாக பாதிக்கப்படும் மார்பக புற்றுநோயை எவ்வாறு ஆரம்ப கட்டத்தில் வீட்டிலேயே கண்டறியலாம் என்று மருத்துவர் சுகன்யா அனந்தராமன் விளக்கம் அளித்துள்ளார். அதனை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
தற்போதைய காலகட்டத்தில் நிறைய பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருக்கிறது. தொடக்கத்திலேயே இதனைக் கண்டறிந்தால், முறையான சிகிச்சை அளிக்க எளிதாக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Advertisment
மார்பக புற்றுநோய் என்றாலே எல்லோருக்கும் பயம் இருக்கும். எனவே, மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவை என்று மருத்துவர் சுகன்யா அனந்தராமன் அறிவுறுத்துகிறார்.
மார்பக புற்றுநோய் பாதிப்பு இருக்கிறதா என்பதை வீட்டிலேயே சுயமாக பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் சுகன்யா அனந்தராமன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, மாதம் ஒரு முறை இந்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்துகிறார்.
மாதவிடாய் நேரத்தின் போது இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். ஆனால், மாதவிடாய் நிறைவடைந்து மெனோபாஸ் நிலையில் இருப்பவர்கள், ஏதாவது ஒரு மாதத்தின் தொடக்கத்தில் இந்த சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
Advertisment
Advertisements
மார்பக புற்றுநோய் குறித்து சுயபரிசோதனை செய்பவர்கள், விரல்களின் நுனிப்பகுதியை பயன்படுத்தக் கூடாது. விரலின் நடுப்பகுதியை உபயோகிக்க வேண்டும். மேலும், கண்ணாடி முன்பு நின்று இதனை செய்ய வேண்டும்.
அதன்படி, இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்து இரு மார்பகங்களின் அளவையும் பார்க்க வேண்டும். இரு மார்பகங்களின் அளவு மற்றும் வடிவத்தில் மாற்றம் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
இதையடுத்து, மார்பகங்களை மெலிதாக தடவி பார்க்க வேண்டும். அப்போது, ஏதாவது ஒரு பகுதியில் தடிமனாக இருந்தால் அவை, மார்பக புற்றுநோய்க்கு அறிகுறியாக இருக்கலாம். இதேபோல், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகராமல், அப்படியே அந்தக் கட்டி இருந்தால் நிச்சயம் மருத்துவ பரிசோதனை தேவை.
இந்தக் கட்டி மார்பகம் மட்டுமின்றி கை-இடுக்குப் பகுதியிலும் கூட இருக்கலாம். எனவே, இது போன்ற மாற்றங்களை சுயபரிசோதனை செய்யும் போது உணர்ந்தால், நிச்சயம் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.
நன்றி - Dr Suganya Anandaraman Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.