90’s ஹீரோயின்… இப்போ சீரியலில் கெத்தான மாமியார்… செம்பருத்தி அகிலா பர்சனல் பக்கம்..

sembaruthi serial news: 2008ஆம் ஆண்டு சன்டிவியில் பொறந்த வீடா புகுந்த வீடா சீரியலில் நடித்த பிறகு 10 ஆண்டுகள் சின்னத்திரையை விட்டு விலகினார்.

priya raman

தமிழ் சினிமாவில் 90’sகளில் கலக்கி கொண்டிருந்த சினிமா நடிகைகள் பலரும் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றனர். அந்த வகையில் பிரியா ராமனும் ஒருவர். கேரள மாநிலத்தை சேர்ந்த இவர் 1993 ஆம் ஆண்டு, இயக்குனர் நட்ராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தயாரித்த ‘வள்ளி’ படத்தின் மூலம் ஹீரோயினாக .அறிமுகமானார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் கவனம் செலுத்த துவங்கினார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 1997ல் சூர்ய வம்சம் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார். சரத்குமாரின் காதலியாக நடித்திருப்பார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. தமிழில் பொன்மனம், ஹரிசந்திரா, புதுமை பித்தன் , நேசம் புதிது போன்ற படங்களில் நடித்தார். ஹிந்தியிலும் ஒரு படத்தில் நடித்துள்ளார். நேசம் புதுசு’ படத்தில் நடிகர் ரஞ்சித்துடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் காதலித்த அதே ஆண்டே 1999 -யில் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து சிறிது காலம் விலகினார் பிரியா ராமன்.

அதன்பிறகு 2000ஆம் ஆண்டு ஸ்னேகதீரம் என்ற மலையாள சீரியல் மூலம் தனது சின்னத்திரை பயணத்தை துவங்கினார். தொடர்ந்து பல மலையாள சீரியல்களில் நடித்து வந்தார். ஜெயாடிவியில் ஸ்ரீதுர்கா, கிரிஜா எம்ஏ போன்ற பல்வேறு தொடர்களில் நடித்தார். 2008ஆம் ஆண்டு சன்டிவியில் பொறந்த வீடா புகுந்த வீடா சீரியலில் நடித்த பிறகு 10 ஆண்டுகள் சின்னத்திரையை விட்டு விலகினார். இதற்கிடையில் 13 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த ரஞ்சித்தும் பிரியா ராமனும் 2014ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். விவகாரத்து பற்றி பிரியா ராமன் கூறும்போது தன்னிடம் தன்னம்பிக்கை நிறைய உள்ளது. யார் தயவும் இன்றி வாழ்ந்து காட்டுவேன் எனக் கூறினார். சில வருடங்களுக்கு பிறகு ரஞ்சித் ராகசுதாவை திருமணம் செய்துகொண்டார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரியா ராமன் 2017ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி சீரியல் மூலம் மறுபடியும் நடிக்க தொடங்கினார். இந்த தொடரில் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் மிரள வைக்கிறார். செம்பருத்தி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஆதி பார்வதி ஜோடிக்கு அடுத்தபடியாக அகிலாண்டேஸ்வரிக்குத்தான் தனி ஃபேன்ஸ்.

பிரியா ராமனுக்கு சினிமாவை விட அதிக ரீச் கிடைத்தது செம்பருத்தி சீரியலில் தான். தற்போது 1000 எபிசோடுகளை கடந்து டாப் நல்ல டிஆர்பியில் உள்ளது செம்பருத்தி சீரியல். மேலும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜீன்ஸ் என்ற ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். பிரியா ராமன் நிஜத்திலும் அகிலா கேரக்டர் தான். எதற்கும் கவலைப்படாமல் தன் மனதிற்கு சரி எனப்படும் விஷயத்தை தைரியமாக செய்வாராம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sembaruthi serial actress akhilandeshwari priya raman biography

Next Story
பாண்டியன் ஸ்டோர்ஸ் இறுதிநாள் ஷூட்தான் இப்போ ட்ரெண்டிங்.. ஹேமா யூடியூப் சேனல்!Pandian Stores Meena Hema Diary Youtube Channel Review
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com