semiya biryani recipe semiya biryani tamil : சேமியா பிரியாணி.காலை உணவுக்கு டிரை பண்ணி பாருங்க.
சேமியாவில் பிரியாணி செய்தால் சூப்பராக இருக்கும். குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். இந்த சேமியா பிரியாணி செய்து வீட்டிலுள்ளவர்களுக்கு வீட்டிலேயே விருந்து படையுங்கள்
தேவையான பொருட்கள்: சேமியா – ஒரு கப் முட்டை – ஒன்று பிரியாணி இலை – 2 பட்டை – 1 கிராம்பு – 4 ஏலக்காய் – 2 வெங்காயம் – ஒன்று தக்காளி – ஒன்று கேரட் – ஒன்று பச்சை பட்டாணி – கால் கப் பீன்ஸ் – 5 இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் கரம் மசாலா அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் -கால் டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 பச்சை மிளகாய் -2 முந்திரி – 5 எண்ணெய் உப்பு
செய்முறை: முதலில், வாணலியை அடுப்பில் வைத்து என்னைவிட்டு சூடானதும், பிரியாணி இல்லை, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து வதக்கவும். பிறகு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். தக்காளி சேர்க்கவும். தக்காளி வெந்ததும் பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட்டுடன் பச்சை பட்டாணி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். காய் பாதி வெந்ததும், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். பிறகு, ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும், சேமியா சேர்த்து வேகவிடவும். சேமியா பாதி வெந்ததும் முட்டை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி வேகவிடவும். அவ்ளோதாங்க.. சுவையான சேமியா பிரியாணி ரெடி..!.