Semiya tamil news, semiya recepies: உடனடியாக அவசரத்துக்கு ஏதாவது உணவு தயார் செய்ய வேண்டுமானால் சேமியா இருந்தால் போதுமானது. விதவிதமாக செய்து அசத்திவிடலாம். சேமியா இருந்தால் போதும் சேமியா உப்புமா, சேமியா கேசரி, சேமியா பாயசம் என்று செய்து அசத்திவிடலாம்.
பொதுவாக புதிய உணவு வகை என்பது யாரும் யோசிக்காத வகையில் பலரும் விரும்புபடியான ஒரு ரெசிபி செய்வதுதான் புதிய உணவு வகையாக பெயர் பெற்றுள்ளன.
அப்படி சேமியாவை வைத்து செய்யப்படும் தயிர் சேமியா ஒரு புதிய ரெசிபி ஆக உருவாகியுள்ளது. தயிர் சேமியா பெயரே புதுசா இருக்கிறது இல்லையா? அதன் சுவையும் புதிதாகத்தான் இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.
Curd semiya recepies : தயிர் சேமியா செய்ய தேவையானப் பொருட்கள்:
சேமியா 2 கப் எடுத்துகொள்ளுங்கள். அதனுடன் வெங்காயம் ஒன்று, தயிர் 2 கப், பால் ஒரு கப், 3 பச்சை மிளகாய், கறிவேப்பிலை சிறிதளவு, தேவையான அளவு எண்ணெய், உப்பு எடுத்துக்கொள்ளுங்கள்.
தாளிப்பதற்காக கடுகு, உளுத்தம்பருப்பு இரண்டும் கால் டீஸ்பூன், கடைலைப் பருப்பு அரை டீஸ்பூன், 5 முந்திரி பருப்பு எடுத்துக்கொள்ளுங்கள். இவைகள்தான் தயிர் சேமியா செய்வதற்கு தேவையான பொருட்கள்.
செய்முறை:
தயிர் சேமியா எப்படி செய்ய வேண்டும் என்பதை இனி பார்ப்போம்.
முதலில் வானலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு, தாளிப்பதற்கான பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். இவை நன்றாக வதங்கிய பிறகு, அதில் சேமியாவை சேர்த்து தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு சேமியா நன்றாக குழையும் அளவுக்கு வேக வைக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு தயிர் சேமியா இனிப்பாக இருக்க வேண்டுமானல் உப்புக்கு பதில் சர்க்கரை போட்டுக்கொள்ளலாம். தயிர் சேமியாவை நன்றாக குழைய விட வேண்டும் அப்போதுதான் சுவை மிகுதியாக இருக்கும்.
சேமியா வெந்த பின்பு, ஸ்டவ்வில் இருந்து இறக்கி ஆறவைக்க வேண்டும். பிறகு அதனுடன் தயிர், பால் சேர்த்து நன்றாக கலக்கிவிட்டால் தயிர் சேமியா தயாரிகிவிட்டது.
தயிர் சேமியாவை டெக்கரேட் செய்ய விரும்பினால், சில திராட்சைகள், முந்திரி பருப்பு ஆகியவற்றை மேலே தூவி விட்டால் பார்க்க அழகாக இருக்கும். அவ்வளவுதான், இப்போது சுவையான தயிர் சேமியாவை சாப்பிடலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"