குளிக்கும்போது மூச்சுத் திணறல்- வயதானவங்க இந்த தவறை செய்யாதீங்க: மருத்துவர் அட்வைஸ்

குளிக்கும்போது தலையிலோ அல்லது முகத்திலோ தண்ணீரை ஊற்றித் தொடங்குவது பாதிப்பில்லாதது போல் தோன்றலாம். ஆனால், இது தேவையற்ற உடல்ரீதியான மாற்றங்களைத் தூண்டிவிடும்.

குளிக்கும்போது தலையிலோ அல்லது முகத்திலோ தண்ணீரை ஊற்றித் தொடங்குவது பாதிப்பில்லாதது போல் தோன்றலாம். ஆனால், இது தேவையற்ற உடல்ரீதியான மாற்றங்களைத் தூண்டிவிடும்.

author-image
WebDesk
New Update
Bathing safety

Senior citizens must never do this while taking a bath

குளிப்பது என்பது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம். ஆனால், குளிக்கும் நீரின் வெப்பநிலை மற்றும் அதன் விளைவுகள் குறித்து நாம் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை. குறிப்பாக, திடீரென குளிர்ந்த அல்லது சூடான நீரை உடலில் ஊற்றுவது சில உடல்ரீதியான மாற்றங்களைத் தூண்டிவிடும். இது வயதானவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பொதுவானது என்றாலும், வயதானவர்களுக்கு இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

Advertisment

டெல்லியில் உள்ள சி.கே. பிர்லா மருத்துவமனையின் உள் மருத்துவ இயக்குநர் டாக்டர் மனிஷா அரோரா கூறுகையில், குளிக்கும் முறைகளை சரியாகப் புரிந்துகொள்வதும், மயக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியமான காரணங்களைத் தெரிந்துகொள்வதும் பல உயிர்களைக் காப்பாற்றும். இது வயதானவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் என்றார்.
 
நீரின் வெப்பநிலைக்கு உடலைப் பழக்கப்படுத்துவதன் முக்கியத்துவம்
குளிக்கும்போது தலையிலோ அல்லது முகத்திலோ தண்ணீரை ஊற்றித் தொடங்குவது பாதிப்பில்லாதது போல் தோன்றலாம். ஆனால், இது தேவையற்ற உடல்ரீதியான மாற்றங்களைத் தூண்டிவிடும். டாக்டர் அரோரா, கால்களில் இருந்து குளிக்கத் தொடங்குமாறு பரிந்துரைக்கிறார்.

இது ஏன் முக்கியம்?

திடீர் வெப்பநிலை அதிர்ச்சி: தலையிலோ அல்லது உடலின் மேற்பகுதியிலோ நேரடியாகக் குளிர்ந்த அல்லது சூடான நீரை ஊற்றுவது இரத்த நாளங்களின் அளவை விரைவாக மாற்றும் (ரத்தக் குழாய் சுருக்கம் அல்லது ரத்தக் குழாய் விரிதல்). இது இரத்த அழுத்தத்தைப் பாதித்து, தலைச்சுற்றல் அல்லது மயக்கத்தைத் தூண்டும்.

Advertisment
Advertisements

படிப்படியான சரிசெய்தல்: கால்களில் இருந்து குளிக்கத் தொடங்குவது, உடலின் வெப்பநிலைப் சமிஞ்கைகளை மூளைக்கு அனுப்ப அனுமதிக்கிறது. இது இருதய அமைப்பு நிலையாக இருக்க நேரம் கொடுக்கிறது.

bath_23

இந்த முறை வயதானவர்களுக்கு மட்டுமல்ல, எல்லா வயதினருக்கும் படிப்படியாக உடலை வெப்பநிலைக்குப் பழக்கப்படுத்துவது நன்மை பயக்கும் என்று டாக்டர் அரோரா குறிப்பிட்டார். வயதானவர்களுக்கு வெப்பநிலை கட்டுப்பாடு குறைதல் மற்றும் நிலை சார்ந்த இரத்த அழுத்தம் குறைதல் போன்ற வயது தொடர்பான மாற்றங்கள் காரணமாக அதிக ஆபத்து உள்ளது. ஆனாலும், இளைஞர்களுக்கும் தற்காலிக தலைச்சுற்றல் அல்லது லேசான மயக்கம் ஏற்படலாம்.

ஆபத்துகளைக் குறைக்க, டாக்டர் அரோரா பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கிறார்:

பாதுகாப்பான குளியல் வழக்கத்தை கடைபிடிக்கவும்: எப்போதும் கால்களில் இருந்து மேல்நோக்கி குளிக்கத் தொடங்குங்கள்.

நீரேற்றமாக இருங்கள்: போதுமான தண்ணீர் குடிப்பது இரத்த அழுத்தத்தைப் பராமரிக்க உதவும்.

குளியலறை வெப்பநிலையைக் கண்காணிக்கவும்: அதிக சூடான அல்லது குளிர்ந்த நீரில் குளிப்பதைத் தவிர்க்கவும். மேலும், அதிக வெப்பத்தைத் தடுக்க குளியலறையை காற்றோட்டமாக வைத்திருங்கள்.

உதவி சாதனங்களைப் பயன்படுத்தவும்: கைப்பிடிகள், சறுக்காத பாய்கள் மற்றும் குளியல் நாற்காலிகள் கூடுதல் ஸ்திரத்தன்மையை வழங்கும்.

வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள்: குறைந்த இரத்த அழுத்தம் அல்லது இதயப் பிரச்சினைகள் போன்ற அடிப்படை நிலைகளைக் கண்காணிக்கவும்.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

மயக்கம் வருவது ஒருபோதும் அலட்சியப்படுத்தப்படக்கூடாது. பின்வரும் சூழ்நிலைகளில் மருத்துவரை அணுகவும்:

மயக்கம் மீண்டும் மீண்டும் ஏற்பட்டால்.

மயக்கத்துடன் நெஞ்சுவலி, ஒழுங்கற்ற இதயத்துடிப்பு அல்லது குழப்பம் ஏற்பட்டால்.

தலைச்சுற்றல் அல்லது குமட்டல் போன்ற எச்சரிக்கை அறிகுறிகள் இல்லாமல் மயக்கம் ஏற்பட்டால்.

Read in English: Senior citizens must never do this while taking a bath

 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: