‘என் ஒரிஜினல் அக்கவுண்ட்டை விட போலிக்கு இவ்ளோ ஃபாலோயர்ஸா!’ – புலம்பும் விஜய் டிவி பிரபலம்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி. நாட்டுப்புறப் பாடல்களை எழுதி, மேடையில் பாடுவது தான் இவர்களது சிறப்பு அம்சம். இரண்டு பேரும் வெவ்வேறு அணிகளில் பாடி தங்களது திறமையை நிரூபித்து வந்தனர். சூப்பர் சிங்கர் 6வது சீசனில்…

By: March 20, 2020, 5:28:24 PM

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி. நாட்டுப்புறப் பாடல்களை எழுதி, மேடையில் பாடுவது தான் இவர்களது சிறப்பு அம்சம். இரண்டு பேரும் வெவ்வேறு அணிகளில் பாடி தங்களது திறமையை நிரூபித்து வந்தனர்.

சூப்பர் சிங்கர் 6வது சீசனில் நாட்டுப்புறப் பின்னணியில் பாடல்களை பாடி மக்களைக் கவர்ந்தவர்கள் செந்தில் – ராஜலட்சுமி தம்பதி. இவர்களே பாடலை எழுதி, அதை பாடியும் வந்தனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் அந்த சீசனை இவர்களுக்காவே நேயர்கள் அதிகம் பார்த்தனர்.


இறுதியில், சூப்பர் சிங்கர் டைட்டிலை செந்தில் கணேஷ் தட்டிச் செல்ல, சூட்டோடு சூடாக ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் ‘என்ன மச்சான்’ பாடலை இத்தம்பதி பாடினர். பாடலும் ஹிட்டாக, அடுத்தடுத்த இவர்களுக்கு சினிமாவில் பாடும் வாய்ப்பு வந்துக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில், ‘கரிமுகன்’ எனும் படத்தில் ஹீரோவாகவும் செந்தில் கணேஷ் நடித்தார்.

’பாரதி கண்ணம்மா’ வெண்பாவின் சுவாரஸ்யமான நிஜ வாழ்க்கை!

இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருவரும் சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.

பேஸ்புக் பக்கத்தில் செந்தில் கணேஷுக்கு என்று நிறைய ஃபாலோயர்ஸ் இருக்கின்றனர். ஆனால் இவரது ட்விட்டர் கணக்கில் தான் பெரிய குழப்பமே.

ட்விட்டரில் செந்தில் கணேஷ் என உலா வரும் அக்கவுண்ட்டுக்கு கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்ட பாலோயர்ஸ் உள்ளனர். ஆனால், இது அவரது உண்மையான அக்கவுண்ட்டே கிடையாதாம். இதை செந்திலே நம்மிடம் உறுதிப்படுத்தினார்.

ஆனால், இவரது போலி அக்கவுண்ட்டை Think Music உள்ளிட்ட முக்கியமான சிலரே ஃபாலோ செய்து வருவது தான் கொடுமை.

இன்னொரு சுவாரஸ்யமான தகவல் என்னவெனில், இவரது ஒரிஜினல் ட்விட்டர் கணக்கான @supersingersen1 ல் இருப்பது வெறும் 65 ஃபாலோயர்ஸ் மட்டுமே!.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Senthil ganesh fake twitter account have more followers than original

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X