Farina Azad : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பா என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஃபரீனா.
சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘கிச்சன் கலாட்டா’ சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய இவர் புதுயுகம் டிவியில் உணவு சார்ந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தற்போது ஜி தமிழில் ‘அஞ்சறைப் பெட்டி’ என்கிற சமையல் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

ஹாய் கைய்ஸ் : “காக்கா” பிடிக்க தெரியாததனால் அழிந்துவிட்டதோ சிட்டுக்குருவிகள்
ஆரம்பம் முதலே நிறைய சீரியல் வாய்ப்புகள் ஃபரீனாவின் கதவை தட்ட, அவற்றை நிராகரித்திருக்கிறார் ஃபரீனா. பின்னர் கலர்ஸ் தமிழின் ‘தறி’ சீரியலும், விஜய் டிவி-யின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலும் ஃபரீனாவின் மனதை மாற்றியிருக்கின்றன. இவற்றில் ’தறி’ சீரியலில், வாய் பேச முடியாத வாணியாகவும், ‘பாரதி கண்ணம்மா’வில் வெண்பா என்ற வில்லியாகவும் மிரட்டி வருகிறார்.
சென்னையில் பிறந்து வளர்ந்த ஃபரீனா, எம்.பி.ஏ முடித்து விட்டு, டிவி-யின் மீதிருந்த ஈர்ப்பால் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தன் கரியரை ஆரம்பித்திருக்கிறார். அப்படி தொலைக்காட்சியில் வேலை செய்யும் வேளையில், அங்கு பணிபுரிந்த ரஹ்மான் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
டெல்லி கூட்டு பாலியல் வழக்கு: தூக்கு தண்டனைப் பெற்ற 4 பேரின் பின்புலம்
திருமணத்துக்குப் பிறகு தான் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஃபரீனாவுக்கு, அவரது ஆடை, ஆபரணங்களுக்காகவே ரசிகர் பட்டாளம் உருவானது. சமையல் நிகழ்ச்சி தொகுப்பாளினி என்பதற்கு ஏற்றவாறு, இவர் மிகப்பெரிய உணவுப் பிரியையாம். அதிலும் தென்னிந்திய உணவுகள் தான் ஃபேவரிட்டாம். தக்காளி சாதத்துடன் சிக்கன் சேர்த்து சாப்பிடுவது, ஃபரீனாவுக்குப் பிடித்தமான ஒன்றாம். அதோடு ட்ரை ஃப்ரூட் லட்டு, சாக்கோ பால்ஸ் தயாரிப்பதில் கைத்தேர்ந்தவர் என காலரை தூக்கி விட்டுக் கொள்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”