சுடிதார்.. கோட் சூட்.. மாடர்ன் டிரெஸ்ஸில் ஆளே மாறிப்போன செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி ஜோடி !

செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதி அடிக்கடி போட்டோஷூட் எடுத்து அதை தங்கள் இன்ஸ்டா பக்கத்தில்’ ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.

செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதி அடிக்கடி போட்டோஷூட் எடுத்து அதை தங்கள் இன்ஸ்டா பக்கத்தில்’ ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
senthil-rajalakshmi-

senthil ganesh rajalakshmi modern outfit photoshoot goes viral on internet

சின்ன மச்சான் பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தவர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியர். இவர்கள் இருவருமே தொழில்முறை நாட்டுப்புற பாடக கலைஞர்கள்.  தம்பதியினர் இருவரும் சேர்ந்து நிறைய மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளனர்.

Advertisment

பிறகு விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சீசன் 6 ரியாலிட்டி ஷோவில்,  செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இருவருமே போட்டியாளர்களாக பங்கேற்றனர். இதில் செந்தில் வெற்றியாளராக உருவெடுத்தார். அவருக்கு ரூ.50 லட்சம் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மேலும் ராஜலட்சுமிக்கு ‘மக்களின் குரல்’ என்ற சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

சூப்பர் சிங்கர் போட்டியின்போது இவர்கள் இருவரும் ஜோடியாக பாடிய, சின்ன மச்சான் பாடல் மிகவும் பிரபலமானது. நடிகர் பிரபுதேவாவுக்கும், இந்த பாடல் பிடித்துவிட, தனது சார்லி சாப்ளின் படத்தில் இருவரையும் இந்த பாடலை பாடவைத்தார். அதிலிருந்து செந்தில் கணேஷ், ராஜலட்சுமி இருவரும் வெள்ளித்திரையில் சினிமா பாடகர்களாக அறிமுகமாகினர்.

சின்ன மச்சான் பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பயங்கர ஹிட் அடித்ததைத் தொடர்ந்து, இருவரும் தமிழ் சினிமாவின் பிரபல பின்னனி பாடகர்களாக உருவெடுத்தனர்.

Advertisment
Advertisements

தற்போது புஷ்பா படத்தில் வெளியான ’சாமி சாமி’ பாடல் ராஜலட்சுமிக்கு நல்ல புகழைத் தேடித்தந்துள்ளது.

செந்திலும் விரைவில் வெளிவரவிருக்கும் படத்தில் இரண்டு நட்சத்திர ஹீரோக்களுக்கு பாடியுள்ளார். ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வரவில்லை.

செந்தில் கணேஷ், ராஜலட்சுமி தம்பதி அடிக்கடி போட்டோஷூட் எடுத்து அதை தங்கள் இன்ஸ்டா பக்கத்தில்’ ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.

அப்படி இவர்களின் கல்யாண போட்டோஷூட் ஒன்று சமீபத்தில் இணையத்தில் தீயாக பரவியது.

இந்நிலையில் இப்போது இருவரும் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளனர். அதில் எப்போதும் வேட்டி, சட்டையுடன் இருக்கும் செந்தில், கோட் சூட், கண்ணாடி என பக்கா மாடர்னாக ஆளே மாறியிருக்கிறார். அதேபோல எப்போதும் புடவையுடன் போஸ் கொடுக்கும் ராஜலட்சுமி சுடிதார் அணிந்து, ஃபிரி ஹேர் உடன் பார்ப்பதற்கு காலேஜ் படிக்கும் இளம்பெண் போல இருக்கிறார்.

இதைப்பார்த்த ரசிகரகள்’ விதவிதமான கமெண்ட்ஸ்களை வாரி வழங்கி வருகின்றனர்.

செந்தில் கணேஷ், ராஜலட்சுமி இருவரும் காதலித்து 2012 இல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது இந்த ஜோடி பின்னர் பின்னணி பாடல் மற்றும் கச்சேரிகளில் பிஸியாக உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Senthil Ganesh Rajalakshmi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: