/indian-express-tamil/media/media_files/2025/09/08/farina-2025-09-08-13-45-46.jpg)
ஃபரீனா ஆசாத், ஒரு இந்திய தொலைக்காட்சி நடிகை மற்றும் தொகுப்பாளினி ஆவார். இவர் முக்கியமாக தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். 2014-ல் 'ஒரு நிமிடம் ப்ளீஸ்' என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக தனது பயணத்தைத் தொடங்கினார். பின்னர், 'அழகு' என்ற தமிழ் தொலைக்காட்சித் தொடர் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பான 'பாரதி கண்ணம்மா' தொடரில் அவர் நடித்த எதிர்மறை கதாபாத்திரம், அவரைப் பிரபலமாக்கியது.
அவர் கர்ப்பமாக இருந்தபோதும் தொடர்ந்து நடித்து, தனது துறை மீது கொண்ட ஈடுபாட்டை வெளிப்படுத்தினார். இந்நிலையில் ஐ.பி.சி மங்கை யூடியூப் பக்கத்தில் அவர் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் வீட்டை சுற்றிக்காட்டி பல நினைவுகளை பகிர்ந்துக்கொண்டார். ஃபரீனாவின் வீடு நேர்த்தியாகவும் தனித்துவமாகவும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வீட்டின் சுவர்களில் உள்ள ஓவியங்கள், பல்வேறு மதங்களின் அடையாளங்கள், மற்றும் அவரது தம்பியின் ஓவியங்கள், குழந்தை பருவ புகைப்படங்கள் ஆகியவை வீட்டின் அழகை மேலும் கூட்டுகின்றன. ஃபரீனா தனது வாழ்க்கையில் பெற்ற விருதுகளை ஒரு தனி இடத்தில் வைத்துள்ளார். அவரது முதல் விருது 'ஸ்டார் பிளேயர்' என இரண்டு முறை கிடைத்தது.
மேலும், 'பாரதி கண்ணம்மா' தொடரில் அவர் கர்ப்பமாக இருந்தபோது நடித்ததற்காக கிடைத்த விருது அவரது குழந்தைக்கு கிடைத்ததாகவே பெருமிதத்துடன் கூறினார். இந்த நிலையை அடைய, அவர் தினமும் 2-3 மணி நேரம் மட்டுமே தூங்கி கடினமாக உழைத்ததாக கூறுகிறார். மேலும் தனது வீட்டில் மாடித்தோட்டம் எல்லாம் ஒன்றும் இல்லை வெறும் கற்றாழைச்செடி மட்டும் ஒரு தொட்டியில் வளர்த்து வருவதாகவும் அதுவும் பால்கனியில் இருப்பதாகவும் கூறினார்.
ஃபரீனா, "உப்பு புளி காரம்" படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். மேலும், "எல்லா விஷயத்தையும் நேர்மறையாக பார்க்க வேண்டும்" மற்றும் "குறைந்த விஷயங்களில் கூட மகிழ்ச்சியைக் கண்டறிய வேண்டும்" என்ற கொள்கைகளை அவர் வலியுறுத்துகிறார். தினமும் காலையில் எழுந்தவுடன், "நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன், எதையும் சாதிக்க முடியும்" என்று நினைப்பதாகவும், இது அவரது வாழ்வில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளதாக குறிப்பிடுகிறார். பொது வாழ்க்கையில் சில தவறான புரிதல்களையும் அவமானங்களையும் சந்தித்தாலும், உண்மையான உறவுகளே தனக்கு முக்கியம் என்று ஃபரீனா கூறுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.