உடம்புல அவ்ளோ பிரச்னை இருக்கு… ஆனா என் மகனுக்காக ஓடிட்டே இருப்பேன் – எதிர்நீச்சல் நடிகை ஹரிபிரியா எமோஷ்னல்

அதையெல்லாம் தாண்டி ஓடிக்கிட்டே இருக்கறதுதான் அன்ஸ்டாப்பபிள். என்னோட வாழ்க்கையிலும், உடல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பல தடைகள் இருந்துச்சு. ஆனா, அதையெல்லாம் மீறி நான் இங்க நின்னுக்கிட்டு இருக்கேன்.

அதையெல்லாம் தாண்டி ஓடிக்கிட்டே இருக்கறதுதான் அன்ஸ்டாப்பபிள். என்னோட வாழ்க்கையிலும், உடல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பல தடைகள் இருந்துச்சு. ஆனா, அதையெல்லாம் மீறி நான் இங்க நின்னுக்கிட்டு இருக்கேன்.

author-image
WebDesk
New Update
Haripriya

Serial Actress Haripriya

கலகலப்பான பேச்சும், இயல்பான நடிப்பும்... இவை இரண்டும் ஒருசேரக் கலந்த ஒரு நடிகை என்றால், உடனே நம் நினைவுக்கு வருபவர் சின்னத்திரை நாயகி ஹரிப்ரியா. சமீபத்தில் எஸ்.எஸ்.மியூசிக் நடத்திய 'சூப்பர் வுமன் அவார்ட்ஸ் 2025’ (Super Woman Awards 2025) விருதுகள் வழங்கும் விழாவில் ஹரிப்ரியா, "அசைக்க முடியாத பெண்" (Unstoppable Woman) என்ற மதிப்புமிக்க விருதை வென்றார். 

இந்த விருதை அனைத்துப் பெண்களுக்கும் சமர்ப்பித்த ஹரிப்ரியா, ஒவ்வொரு பெண்ணும் "அசைக்க முடியாதவர்கள்தான்" என்றார்.

Advertisment

"வாழ்க்கைன்னா ஒரு நேரான, பட்டுப் போன்ற பாதை இல்லை. அதுல நிறைய டிராஃபிக் ஜாம், பிரேக் டவுன், கரடுமுரடான பாதைன்னு நிறைய தடைகள் இருக்கும். அதையெல்லாம் தாண்டி ஓடிக்கிட்டே இருக்கறதுதான் அன்ஸ்டாப்பபிள். என்னோட வாழ்க்கையிலும், உடல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பல தடைகள் இருந்துச்சு. ஆனா, அதையெல்லாம் மீறி நான் இங்க நின்னுக்கிட்டு இருக்கேன். 

இன்னொரு விஷயம் நான் இங்க சொல்ல விரும்பறேன். ஒரு பெண்ணை "நான் உன் கூட இருக்கேன், உனக்கு சப்போர்ட் பண்ணுவேன். நீ போற பயணத்துல நான் உன்னோட கை பிடிச்சு நடப்பேன்" - னு ஒரு நம்பிக்கை கொடுத்துட்டு, கையை உதறிட்டு போய்டுவாங்க. அப்படிப் பண்ணாதீங்க.

Advertisment
Advertisements

என் வாழ்க்கையில நான் துவண்டு போறப்போ ஒரு விஷயம் என் மனசுல ஓடும், அதுதான் நான் ஒரு அம்மாவா, என் பையனுக்காக ஓடுவேன்னு சொல்வேன். அம்மான்றது குழந்தை பெத்தவங்க மட்டும் இல்ல. தாய் உள்ளம் இருக்கிற எல்லா பெண்களுமே அம்மா தான். தன்னோட அப்பா அம்மா, சகோதர சகோதரி, இல்ல தான் வளர்க்குற யாரோ ஒருத்தருக்காக தாய் உள்ளத்தோடு ஓடுறவங்க தான் எல்லா பெண்களும்! அந்த தைரியம் தான் நம்மள தொடர்ந்து ஓட வைக்குது.

இந்த அவார்ட் எனக்காக இல்ல, ஒவ்வொரு நாளும் கஷ்டப்பட்டு முன்னேறிட்டு இருக்கிற எல்லா பெண்களுக்கும் சமர்ப்பணம். எல்லா பெண்களும் அன்ஸ்டாப்பபிள்", என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஹரிபிரியா. 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: