Serial Actress Janani Ashok Kumar Youtube Channel Fish Recipes Tamil News : பல சின்னதிரை சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து அசத்திக்கொண்டிருக்கும் ஜனனி அசோக், தனக்கென தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனலையும் தொடங்கியிருக்கிறார். 2 லட்ச சப்ஸ்க்ரைபர்ஸ்களை விரைவில் பெறவிருக்கும் ஜனனி, சமீபத்தில் ஜான்'ஸ் கிச்சன் எனும் புதிய பிளேலிஸ்ட்டை இணைத்திருக்கிறார். அதன்மூலம் கோயம்புத்தூர் ஸ்பெஷல் மத்தி மீன் வறுவல் எப்படிச் செய்வது என்பதைப் பகிர்ந்திருக்கிறார். நாமும் ட்ரை பண்ணுவோமா!
"என்னுடைய அம்மா செய்யும் எல்லா உணவு வகைகளும் மிக ருசியாக இருக்கும். அந்த வரிசையில் கோயம்புத்தூர் ஸ்பெஷலான இந்த மத்தி மீன் வறுவல் வேற லெவல் டேஸ்ட்டாக இருக்கும். இந்த ஒரேயொரு மீன் வறுவல் இருந்தால் போதும், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல் என எதுவுமே வேண்டாம். அந்த அளவிற்கு ருசியான ஒரு வறுவல் ரெசிபி.
இந்த சுவையான வறுவல் செய்ய, பூண்டு, சிவப்பு மிளகாய் தூள், உப்பு மற்றும் புளி ஆகிய வெறும் நான்கு பொருள்கள் மட்டும் போதும். அதேபோல இந்த வறுவலுக்கு அதிகப்படியான எண்ணெய் பயன்படுத்தவும் அவசியமில்லை. அதிலும் தேங்காய் எண்ணெய் உபயோகித்தால், அதன் மணம், ருசி இரண்டுமே வேற லெவலில் இருக்கும்.
சாம்பார், ரசம், கூட்டு என எப்போதுமே சமையலில் பூண்டு அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. இது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமில்லாமல் கேஸ்ட்ரிக் பிரச்சனைகளையும் நீக்குகிறது. எடுத்துக்கொண்ட நான்கு பொருள்களையும் நன்கு அரைத்து, ஒவ்வொரு மீனாக எடுத்து, அதன்மேல் கோட் செய்து பிறகு அவற்றை ஃப்ரிட்ஜில் 2 மணிநேரம் வைத்துவிடுங்கள். பிறகு சிறிதளவு தேங்காய் எண்ணெய்யில் இரும்பு அல்லது வீட்டில் இங்கும் டவாவில் வறுத்தெடுங்கள். அவ்வளவுதான் சுவையான மத்தி மீன் வறுவல் தயார்!
உடனே செய்து சாப்பிடுகிறீர்கள் என்றால் ஃப்ரிட்ஜில் வைத்தால் போதும் இல்லையென்றால் ஒரு வாரம் வரை ஃப்ரீசரில் வைத்துக்கொண்டு தேவைப்படும்போது வறுத்து சாப்பிடலாம். அதேபோல இதுபோன்ற மீன் வறுவலுக்கு பொதுவாக எலுமிச்சை சேர்ப்பார்கள், ஆனால் ஒருமுறை புளி சேர்த்துச் செய்துபாருங்கள். நிச்சயம் அதன் சுவை உங்களுக்குப் பிடிக்கும். சாப்பாடு செய்றது லவ் பண்ணி செய்யணும். அப்போதான் செய்யுற நமக்கும் சாப்பிடுற மத்துவங்களுக்கும் திருப்தியா இருக்கும்" என்றபடி நிறைவு செய்கிறார் ஜனனி. நீங்களும் மத்தி மீன் ஃப்ரை செய்ய ரெடியாகியாச்சு போல!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.