Serial Actress Janani Ashok Love Failure Tamil News : மாப்பிள்ளை, மௌன ராகம், செம்பருத்தி உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜனனி அசோக், தான் திரைத்துறைக்கு வந்த பாதைகளையும் காதல் பிரிவைப் பற்றியும் சமீபத்தில் பகிர்ந்துகொண்டார்.
"என்னுடைய 17 வயதில் கல்லூரி செல்வதற்கு முன்பு, லோக்கல் டிவி சேனலில் விஜே-வாக பணியாற்றினேன். அப்போதுதான் என்னைப் பற்றி எனக்கே தெரிந்தது. எனக்குத் தெரியாதவர்களிடம் பேசுவதில் இருக்கும் தயக்கம் மற்றும் கேமரா முன் பேசு பயம் ஆகியவற்றை உடைப்பதற்குக் கொஞ்சம் நாள் ஆனது. இவற்றை எதிர்கொண்டு பிறகு ஒரு குறும்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்துதான் எனக்கு விஜய் டிவியின் மாப்பிள்ளை தொடருக்கான வாய்ப்பு கிடைத்தது.
என்னுடைய சீரியல் வாழ்க்கை நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது. ஆனால், ஒரு சேனலில் செம்பருத்தி சீரியலில் நான் நடித்துக்கொண்டிருக்கும்போதே என்னுடைய கதாபாத்திரத்திற்கு வேறொருவரைத் தேர்வு செய்தது மிகவும் வேதனையளித்தது. அதற்குக் காரணம், நான் அதே வேளையில் வேறொரு சீரியலில் கமிட்டானதுதான். அதனாலேயே, செம்பருத்தி சீரியலில் எனக்கான கதைக்களத்தை மாற்றி எனக்கு நெருக்கடி கொடுக்க நினைத்தார்கள்.
ஏற்கெனவே அந்த கதாபாத்திற்கான வேறொரு நபரைத் தேர்வு செய்துவிட்டு என்னிடம் விஷயத்தை சொன்னார்கள். அதனால் மனமுடைந்து நிறைய அழுதேன். ஆனா, ஏண்டா அழுதோம் எனப் பின்னாளில் வருத்தப்பட்டேன். எதிர்பாராத ஏமாற்றங்கள் நடக்கத்தான் செய்யும். ஆனால், அதனைக் கடந்து செல்லவேண்டும்.
என் வாழ்நாளில் துவண்டுபோன தருணம் என்றால், என் காதல் தோல்வியை சொல்லலாம். இந்த புது வருடத்தில்தான் என்னுடைய பிரேக் அப் நடந்தது. அதற்குக் காரணம் அவருடைய குடிப்பழக்கம். எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. எங்களுடைய 5 ஆண்டுகள் காதல் பிரேக் அப் ஆனபோதிலும், மனம் கேட்கவில்லை. ஒரு மாதம் முன்பு வரை மீண்டும் அவருடன் சென்று இணைந்துவிடலாம் என்றுதான் எண்ணினேன். ஆனால், எனக்கு உண்மையாக அவர் இல்லை என்கிற விஷயம் அறிந்து இப்போது சிங்கிள் பெண்ணாக சந்தோஷமாக இருக்கிறேன். ஆனாலும், நான் எவ்வளவு பெரிய முட்டாளா இருந்திருக்கிறேன்?".
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.