/tamil-ie/media/media_files/uploads/2022/03/Sweety.jpg)
Serial actress kanmani manoharan
Serial actress kanmani manoharan
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா தொடர் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து இல்லத்தரசிகள், இளம்பெண்கள், குழந்தைகள் என அனைவரின் விருப்பமான தொடராக உள்ளது. இது ‘கிருஷ்ணகோலி’ என்ற பெங்காலி சீரியலின் தழுவலாகும்.
பாரதி கண்ணம்மா சீரியலில், அருண் பிரசாத், வினுஷா தேவி, ஃபரினா ஆசாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
அதில் கண்ணம்மாவாக நடித்து அனைவரின் இதயங்களையும் கட்டிப்போட்ட ரோஷினி ஹரிப்பிரியன் சீரியலில் இருந்து விலகினார். தற்போது, அவருக்கு பதிலாக புதிய கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார்.
இப்போது ரோஷினி குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில், 10 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டிருக்கிறார்.
ரோஷினியைத் தொடர்ந்து, அகிலன் கேரேக்டரில் நடித்த அகிலன் எஸ்பிஆர். பட வாய்ப்புகள் வந்ததால், சீரியலை பாதியிலேயே கைவிட்டு வெள்ளித்திரைக்கு போனார். தற்போது புது அகிலனாக’ சுகேஷ் ராஜேந்திரன் நடிக்கிறார்.
இதில் அகிலனின் மனைவி அஞ்சலியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கண்மனி மனோகரன். இவரும், பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து சமீபத்தில் விலகினார்.
கண்மனி இப்போது ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் குயின் ரியாலிட்டி ஷோவில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். மேலும் ஒரு புதிய சீரியலிலும் நடிக்கிறார். அதன் புரோமோ கூட சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் கண்மனியின் இன்ஸ்டா போஸ்ட் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. அதில் கருப்பு, வெள்ளை வெஸ்டர்ன் டிரெஸில், கூந்தலை ஃபிரியாக விட்டு’ பார்க்க தேவதை போல இருக்கும் கண்மனி, கடற்கரை மணலில் ஹார்டின் போட்டு, யாரையோ நினைத்து ஏங்கி தவித்தபடி வீடியோ ஒன்றை போட்டுள்ளார். இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதை லைக் செய்துள்ளனர். இதோ அந்த வீடியோ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.