நைட் தூங்கும் முன் இந்த ஃபேஸ் பேக்... காலையில் உங்க ஸ்கின் அப்படி இருக்கும்: சீரியல் நடிகை கிருத்திகா சொல்லும் டிப்ஸ்!
முகத்தை பொலிவாக மாற்றுவதற்கு ஒரு சிம்பிளான ஃபேஸ்பேக்கை சீரியல் நடிகை கிருத்திகா தெரிவித்துள்ளார். இதனை தினசரி செய்து வந்தால் நம் சருமம் மிருதுவாகவும், பொலிவாகவும் மாறி விடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்த சூழலிலும் முகத்தை பொலிவாகவும், மிருதுவாகவும் பராமரிக்க வேண்டும் என்கிற விருப்பம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால், இருக்கும் வேலைகளுக்கு இடையே இதற்கென தனியாக நேரம் ஒதுக்க முடியாது சூழலில் தான் தற்போது பலரது பணி நேரம் இருக்கிறது.
Advertisment
ஆனால், மிகக் குறைவான நேரத்தில் நமது சரும பராமரிப்பை கையாளும் வகையில் சீரியல் நடிகை கிருத்திகா ஒரு ஃபேஸ்பேக்கை பரிந்துரைத்துள்ளார். இதற்கு சுமார் 15 நிமிடங்கள் தான் செலவாகும் என்று கூறியுள்ள அவர், இதனை தொடர்ச்சியாக செய்யும் போது நம் சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 10 பாதாம் பருப்புகளை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இப்படி செய்தால் பாதாம் பருப்புகளில் இருந்து தோல் நீக்குவதற்கு வசதியாக இருக்கும். இவ்வாறு தோல் நீக்கிய பாதாம் பருப்புகளை மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும்.
அத்துடன் சிறிதளவு பால் சேர்த்து கலக்க வேண்டும். காய்ச்சிய பால் அல்லது பச்சை பால் என எதை வேண்டுமானாலும் இதற்கு பயன்படுத்தலாம். இதையடுத்து கொஞ்சமாக தேனையும் இவற்றுடன் சேர்க்க வேண்டும். இப்படி செய்தால் சூப்பரான ஃபேஸ்பேக் தயாராகி விடும்.
Advertisment
Advertisements
இந்த ஃபேஸ்பேக்கை இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக முகத்தில் தேய்த்துக் கொள்ளலாம். பின்னர், சுமார் 15 நிமிடங்கள் கழித்து இதனை கழுவி விட வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்து வந்தால் காலை எழுந்ததும் உங்கள் முகம் பார்ப்பதற்கு பொலிவாக இருக்கும் என்று நடிகை கிருத்திகா தெரிவித்துள்ளார்.
நன்றி - IBC Mangai Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.