பிரபல சீரியல் நடிகை லாவன்யா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா சிறந்த போட்டோஜெனிக் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். ஒருமுறை அவள் கிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், லாவன்யா தன்னுடைய அழகு பராமரிப்பு குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
’நெல்லிக்காய் ரொம்ப நல்லது. நீங்க எவ்வளோ நெல்லிக்காய் எடுத்துக்கிறீங்களோ, அந்தளவுக்கு உங்க உடம்புல இருக்க நச்சுத்தன்மை நீங்கும். அதேநேரம், உங்க சருமமும் பளபளப்பாகும். நான் நெல்லிக்காய் ரொம்ப அதிகமா எடுத்துப்பேன். அம்மா எனக்கு எப்போவும் நெல்லி ஜூஸ் செய்ஞ்சு கொடுப்பாங்க. இது ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா, அதோட முடிவு ரொம்ப நல்லா இருக்கும்.
அடுத்து கறிவேப்பிலை ஜூஸ், கறிவேப்பிலை ஜூஸ் எல்லா நாளுமே எடுத்துக்கக் கூடாதுனு சொல்லுவாங்க. அளவுக்கு மீறுனா, எல்லாமே நஞ்சுதான். கறிவேப்பிலை முடியை கருப்பாக்கும் எல்லாருக்கும் தெரியும். ஆனா, அதையும் தாண்டி அது நம்ம சருமத்துல இருக்க பிளாக் மார்க்ஸ் எல்லாத்தையும் எடுத்துடும்.
நான் கற்றாழை அதிகமா எடுத்துப்பேன். நம்ம உடம்போட வெப்பநிலைய கற்றாழை நல்ல பராமரிக்கும். இதை கொஞ்சம் கொஞ்சமா உங்க டயட்ல சேர்த்துக்கலாம். நான் குளிக்கிறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி கற்றாழை ஜெல் எடுத்து என் முடியில அப்ளை பண்ணிட்டு விட்டுருவேன். கற்றாழை சாப்பிட்டா இளமையா இருக்கலாம் சொல்லுவாங்க.
கற்றாழை எடுத்து, அதோட தோலை நீக்கி ஓடுற தண்ணீல 7-8 முறை கழுவி சாப்பிடலாம். ஒழுங்கற்ற மாதவிடாய், வயிறு வலி இருக்கிறவங்க ரெகுலரா கற்றாழை சாப்பிடும் போது, இந்த பிரச்சனை எல்லாம் சரியாயிடும்.
கற்றாழை ஜெல், சீரகம், குறுமிளகு சேர்த்து நல்ல அரைச்சு அதை வடிகட்டி, அதோட தயிர் சேர்த்து குடிக்கலாம்.
அதேபோல ஒரு கைநிறைய கறிவேப்பிலை எடுத்து, அதை கழுவி கூட தேங்காய் சேர்த்து நல்ல அரைச்சு, வடிகட்டும் போது கரும்பு சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். இது முதல் தடவை குடிக்கும் போது ஒருமாதிரி இருக்கும். ஆனா, பழகிட்டீங்கனா ரொம்ப நல்லா இருக்கும்.
சரும பராமரிப்பு பொறுத்தவரைக்கும் சின்ன வயசுல இருந்து நான் கடைபிடிக்கிற ஒரு விஷயம் மஞ்சள், பாலாடை. உங்க உள்ளங்கையில கொஞ்சமா பாலாடை எடுத்து அதுக்கூட மஞ்சள் சேர்த்து மிக்ஸ் பண்ணி முகத்துல அப்ளை பண்ணலாம். இது செய்தால் முகப்பரு வராது’.
இவ்வாறு பல விஷயங்களை லாவன்யா அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.