Advertisment

வெந்தயம், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்… மீரா கிருஷ்ணா ஹேர் கேர் டிப்ஸ்

நேரம் கிடைக்கும் போது கற்றாழை, பால், பப்பாளி, தக்காளி, முல்தானி மட்டி போன்றவற்றை முகத்துக்கு அப்ளை செய்வேன். அதனால் முகத்தில் பருக்கள் வராமல் பொலிவாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
Meera Krishna

Serial actress Meera Krishna

மீரா கிருஷ்ணா, தமிழ் மற்றும் மலையாள சீரியல் உலகில் நன்கு பிரபலமானவர். கேரள மாநிலம் கோட்டயத்தை பூர்விகமாகக் கொண்ட மீரா, தற்போது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் செட்டில் ஆகிவிட்டார்.

Advertisment

மீரா கிருஷ்ணா ஒருமுறை ஐபிசி மங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது அழகு பரமாரிப்பு குறித்து பகிர்ந்து கொண்டார்.

நான் கற்றாழை ஜெல் தான் பயன்படுத்துறேன். அதுக்கூட மாய்ஸ்சரைசர் பயன்படுத்தியே ஆகணும். நான் பியூட்டி பார்லருக்கு போகும் ஆள் கிடையாது. சின்ன வயசுல இருந்தே வாரத்துக்கு 3 முறை தலைக்கு தேங்காய் எண்ணெய் வைத்து குளிப்பேன். இப்போ வரை அப்படித்தான். 

நடிகையாக இருக்கிறதால தினமும் முடியை அயர்னிங், டிரையிங், கர்ல்ஸ் பண்ண வேண்டியிருக்கும். அதனால எனக்கு நிறைய முடி கொட்டினது. எனக்கு மறுபடியும் முடி வளர்ந்ததற்கு காரணம் எண்ணெய் தேய்த்து குளிக்கிறதுதான். ஆனா இப்போது வயதாவதால், சீரம் யூஸ் பண்றேன்.

நேரம் கிடைக்கும் போது கற்றாழை, பால், பப்பாளி, தக்காளி, முல்தானி மட்டி முகத்துக்கு அப்ளை பண்ணுவேன். அதனால முகத்துல பருக்கள் வராமல் பொலிவா இருக்கும். நைட் ஷூட்டிங் முடிந்து வரும்போது தவறாம ஃபேஸ் மசாஜ்  பண்ணுவேன். தேங்காய் எண்ணெய், ஏதாவது ஒரு மாய்ஸ்சரைசர், கற்றாழை ஜெல்..  யூஸ் பண்ணி ஃபேஸ் மசாஜ் செய்யலாம். சீரம் பயன்படுத்தும் போது முகத்துல ஈரப்பதம் ரொம்ப நேரம் இருக்கும்.

தேங்காய் எண்ணெய்யில வெந்தயம், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், செம்பருத்தி பூ, இலை, கொய்யா இலை இதையெல்லாம் போட்டு நன்கு காய்ச்சி வடிகட்டிய எண்ணெய் தான் முடிக்கு பயன்படுத்துவேன்.

இவ்வாறு மீரா கிருஷ்ணா தனது தோல் மற்றும் முடி பராமரிப்பு குறித்து பகிர்ந்து கொண்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment