/tamil-ie/media/media_files/uploads/2021/08/Mny4.jpg)
Serial Actress Myna Nandhini Youtube Channel Viral Video
Serial Actress Myna Nandhini Youtube Channel Viral Video
Serial Actress Myna Nandhini Youtube Channel Viral Video : சரவணன் மீனாட்சி தொடரில் மைனா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதைக் கவர்ந்த காரணத்தால், மைனா நந்தினி என்று இன்றுவரை அன்போடு அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறார். தங்களுக்கென தனி யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் ஏராளமான Vlog வீடியோக்களை அப்டேட் செய்து வருகிறார். அந்த வரிசையில் சமீபத்தில் தங்களின் அவுட்டிங் காணொளியைப் பதிவு செய்திருந்தனர். ட்ரெண்டிங்கில் இருக்கும் இந்த வீடியோவில் அப்படி என்ன ஸ்பெஷல்? பார்ப்போம்..
"இன்னிக்கு சூப்பரான அவுட்டிங் காணொளியைதான் பார்க்கப்போகிறீர்கள். இதுல என்ன பெரிய விஷயம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அதிகப்படியான வேலை காரணமாக இருவரும் வெளியே செல்லவே இல்லை. இருவரும் ஒன்றாக நேரத்தை செலவழித்து நாட்கள் ஆகின்றன. வெளியே எங்கேயும் கூட்டிட்டும் போக மாட்டிங்குறாரு. ஃப்ரீ டைம் இருந்தால், குறட்டை விட்டு தூங்கவே நேரம் சரியா இருக்கு" என்றபடி தன் கணவர் யோகேஷ் மீது புகார்களை சுமத்தினார் நந்தினி.
மேலும், அன்றைய தினத்தில் தன் கணவருடைய கார்டை எப்படியெல்லாம் செலவழிக்கலாம் என்கிற பிளானோடு, தன் கணவரோடு பியூட்டி பார்லரை அடைந்தார் நந்தினி. அங்கு, பேடிக்கியூர், மேனிகியூர், ஹேர்கட், ஹேர்கலரிங் என ஆளே அடையாளம் தெரியாமல் மாறவேண்டும் என்கிற குறிக்கோளோடு இருந்தார் நந்தினி. அதற்கேற்றது போல, வேக்சிங், த்ரெடிங், கலரிங் என தன்னுடைய மிஷனில் இறங்கினார் நந்தினி.
அதே வேளையில், தான் உண்டு தன் வேலையுண்டு என ஹேர் வாஷ், ஹேர் கட் செய்துகொண்டிருந்த தன் கணவரை சீண்டி அழகு பார்த்தார். மேலும், தங்களின் ஸ்டைலிஸ்ட் பற்றியும், அவரை எப்படி சந்தித்தனர் என்பதைப் பற்றியும் நகைச்சுவையாகப் பகிர்ந்துகொண்டனர். இவை எல்லாவற்றையும் விட இவர்களின் காணொளிகளை மேலும் ரசிக்கவைப்பது கவுன்ட்டர்கள்தான்.
ஒருநாள் முழுவதும் பார்லரில் செலவழித்துவிட்டு, பிறகு இருவரும் இரவு உணவை முடித்துவிட்டு, குறத்தி விட்டுத் தூங்கச் சென்றனர். இந்த காணொளி, சுமார் 3 லட்சம் வியூஸ்களை கடந்து சென்றுகொண்டிருக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.