Advertisment

கிச்சனில் கரப்பான் தொல்லை நீங்க இதை செய்தால் போதும் - நீலிமா ராணி கிச்சன் டூர்

Serial Actress Neelima Rani Kitchen Tour Latest அதேபோல அம்மியில் சட்னி, துவையல் போன்றவற்றை செய்து பாருங்கள். நிச்சயம் அதன் சுவையும் மணமும் வித்தியாசமாக இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Serial Actress Neelima Rani Kitchen Tour Latest Tamil News

Serial Actress Neelima Rani Kitchen Tour Latest Tamil News

Serial Actress Neelima Rani Kitchen Tour Latest Tamil News : திரை பிரபலங்கள் பலரும் தங்களுக்கான யூடியூப் பக்கம் ஆரம்பித்து, அதிலும் ஏராளமான காணொளிகளை அப்லோட் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் சின்னதிரை ராணி நீலிமா ராணி , 'நீல்ஸ்' எனும் பெயரில் யூடியூப் சேனல் ஆரம்பித்துப் பல சுவாரசிய வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். சமீபத்தில் அவர் பதிவு செய்த கிச்சன் டூர் காணொளி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

Advertisment
publive-image

"திடீரென கிச்சன் டூர் என முடிவு செய்துவிட்டோம். ஆனால், வீடியோகென்று தனியாக சுத்தம் செய்யவில்லை. உள்ளதை உள்ளபடி காண்பிக்கப்போகிறேன். அதனால் பயந்துவிடாதீர்கள்" என்கிற டிஸ்க்ளைமரோடு தொடங்கும் இந்த காணொளியில் ஏராளமான பயனுள்ள தகவல்களையும் பகிர்ந்துகொண்டார் நீலிமா.

publive-image

"நம் உடலும் இந்த உலகமும் 70% தண்ணீரில் நிறைந்துள்ளதால், நான் முதலில் தண்ணீரில் இருந்தே ஆரம்பிக்கிறேன். நிறையத் தண்ணீர் குடித்தால் உடலில் உள்ள நச்சுப்பொருள்கள் அழிந்துவிடும். அதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நாங்கள் காப்பர் பானையில்தான் தண்ணீர் வைத்து பயன்படுத்துவோம். இது தண்ணீரிலுள்ள மினரல்களை மேம்படுத்தும். அதேபோல இதனை சுத்தம் செய்ய பீதாம்பரி பவுடரை பயன்படுத்தவேண்டும். ஆரோக்கியத்திற்கு சில பராமரிப்பு வழிமுறைகளை பின்பற்றித்தான் ஆகவேண்டும்.

publive-image

புளி, உப்பு இரண்டையும் எப்போதும் பக்கத்துப் பக்கத்தில்தான் வைத்துக்கொள்ளவேண்டும். அதேபோல அம்மியில் சட்னி, துவையல் போன்றவற்றை செய்து பாருங்கள். நிச்சயம் அதன் சுவையும் மணமும் வித்தியாசமாக இருக்கும். ஆரோக்யமானதும்கூட.

என்னுடைய சமையலறையில் முடிந்த அளவிற்கு பிளாஸ்டிக் கன்டெயினர்களை பயன்படுத்த மாட்டேன். ஆனால், முழுமையாகத் தவிர்க்கமுடியாதே. பிளாஸ்டிக்கில் ஒரு ட்ரே மற்றும் ஸ்டாண்ட் இருகினறன். மற்றபடி, சமையல் பொருள்கள் ஸ்டோர் செய்ய க்ளாஸ் மற்றும் எவர்சில்வர் பாத்திரங்கள்தான் உபயோகிப்பேன்.

அதேபோல வேஸ்ட் மேனேஜ்மேன்ட் முக்கியம். ஒரு பிளாஸ்டிக் ட்ரம் எடுத்து, அதில் காற்றோட்டத்துக்கு சிறிய ஓட்டை போட்டு, அதற்கு அடியிலும் ஓட்டை போட்டு கீழே தட்டு வைத்துக்கொள்ளலாம். மீதமான  காய்கறிகள்,பழங்கள் போன்றவற்றை எடுத்து, அதில் தேங்காய் நாறு அல்லது கோகோ பிட் சேர்த்து உரமாக்கவும். அதேபோல பால் பாக்கெட் கட் செய்தால், முழுமையாகச் செய்யாதீர்கள். அது மக்கவே மக்காது. இவை இயற்கைக்கு நாம் செய்யும் சிறிய நன்மை.

உங்கள் வீட்டு கிச்சனில் கரப்பான்பூச்சிகள் தொல்லை அதிகம் இருந்தால், அதற்குக் கொஞ்சம் கற்பூரம் அரைத்து அதனோடு சிறிதளவு வினிகர் மற்றும் தண்ணீர் சேர்த்து ஸ்ப்ரே செய்யவும். கரப்பான் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துபோகும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Youtube Neelima Rani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment