Serial Actress Neelima Rani Lifestyle Hacks Youtube Video : தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைமுறையை பல்வேறு கோணங்களில் தன்னுடைய யூடியூப் சேனலில் பதிவிட்டு வரும் சின்னதிரை ராணி நீலிமா, சமீபத்தில் சில வீட்டிற்கு உபயோகமான ஹாக்ஸ் பகிர்ந்துகொண்டார். வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள நினைக்கும் பலருக்கும் நிச்சயம் நீலிமா பகிர்ந்துகொண்டவை உபயோகமாக இருக்கும்.

“என்னதான் வீட்டை மாப் போட்டு துடைத்தாலும், ஆங்காங்கே திட்டு திட்டாகத் தெரியும். அது இல்லாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை முதலில் பார்க்கலாம். பொதுவாகவே தண்ணீரில் உப்பு கலந்து குளித்தால் உடலில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜி போய்விடும் என்று சொல்லுவார்கள். அதேபோல வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு சேர்த்து அதனோடு சிறிதளவு ஃப்ளோர் கிளீனர் கலந்து தரையைத் துடைத்தால் நிச்சயம் திட்டுத் திட்டாக ஆகாது. சுத்தம் மட்டுமில்லை, பாதுகாப்பாகவும் இருக்கும்.

அடுத்ததாக, அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்லுவார்கள். அதேபோல நம்மை அப்படியே காண்பிப்பது வீட்டில் இருக்கும் கண்ணாடி. சந்தோஷமாக இருந்தாலும், சோகமாக இருந்தாலும், கண்ணாடியைப் பார்த்தால் ரசிக்கத் தொடங்கி விடுவோம். ஆனால், அதை யாரும் சரியாக மெயின்டெயின் பண்ணுவது கிடையாது. கண்ணாடியை சுத்தமாக வைத்துக்கொள்ள இரண்டு வழிமுறைகள் உள்ளன.

முதலாவதாக, கொஞ்சம் பேஸ்ட், வினிகர், பேக்கிங் சோடா எடுத்துக்கொண்டு மூன்றையும் மிக்ஸ் செய்து கண்ணாடியில் மெதுவாகத் தேய்த்து சுத்தம் செய்யலாம். இல்லையென்றால், என்னுடைய ஃபேவரைட் விபூதி மூலமாகவும் சுத்தம் செய்யலாம். கண்ணாடியை முதலில் வெறும் துணியால் சுத்தம் செய்துவிட்டு, பிறகு சிறிதளவு தண்ணீர் வைத்துத் துடைத்து, அதன்மேல் விபூதி போட்டு மென்மையாகத் தேய்க்கவேண்டும். இறுதியாகத் துண்டு வைத்துத் துடைத்து எடுத்தால், பளிச் கண்ணாடி ரெடி.

கிச்சனில் இருக்கும் டைல்ஸ் எல்லாம் எண்ணெய் பிசுபிசுப்புடன் இருக்கும். அடர்த்தியான எண்ணெய்ப் பிசுக்கு இருந்தால், அதனை வெறும் எலுமிச்சை வைத்தோ அல்லது எலுமிச்சை தோல் எடுத்து, அதனை சுடுதண்ணீரில் கொதிக்கவைத்து, ஆறியபிறகு, அதில் உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து, அந்தத் தண்ணீர் பயன்படுத்தியோ சுத்தம் செய்யலாம். இல்லையென்றால்,பேக்கிங் சோடா, வினிகர் இரண்டும் சம அளவு எடுத்துக்கொண்டு, ஒன்றாகக் கலந்து ஸ்பாஞ் வைத்துத் துடைக்கலாம்”.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil