1 ரூபாய் சாக்லேட், குல்கந்து, வெட்டிவேர் – நீலிமா ராணியின் நாட்டு மருந்துக் கடை விசிட்!

Serial Actress Neelima Rani Viral Youtube Video Tamil News பாரம்பரியத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பியுங்கள். குறைந்த செலவில் ஏராளமான பலன்கள் நிச்சயம் உண்டு

Serial Actress Neelima Rani Viral Youtube Video Tamil News
Serial Actress Neelima Rani Viral Youtube Video Tamil News

Serial Actress Neelima Rani Viral Youtube Video Tamil News : தன்னுடைய யூடியூப் பக்கத்தில் எப்போதும் வித்தியாச அதே நேரத்தில் உபயோகமான காணொளிகளைப் பதிவு செய்து வரும் நீலிமா ராணி, தற்போது நாட்டு மருந்துக் கடைகளின் முக்கியத்துவத்தைக் காணொளியாக்கிப் பதிவு செய்திருக்கிறார். அப்படி என்ன அந்த காணொளியில் இருக்கிறது? பார்ப்போமா!

“நம் முன்னோர்கள் கண்டுபிடித்த மருத்துவ குணங்கள் நிறைந்த ஏராளமான உணவுப் பொருள்கள் உள்ளன. அவை ஒரே இடத்தில் சங்கமமாகி இருக்கும் இடம்தான் நாட்டு மருந்துக் கடைகள். ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, நாம் உண்ணும் உணவு முதல் சரும பராமரிப்பு பொருள்கள் வரை அத்தனையும் இந்த ஒரே இடத்தில் கிடைக்கின்றன. பூஜைக்குத் தேவையான புனிதமான பொருள்களும் இங்கு உள்ளன. அப்படி சாம்பிராணி வாங்கித்தான் முதல் முதலில் இந்த கடைக்கு வந்தேன். அன்று முதல் சுமார் 6, 7 வருடங்களாக வந்துகொண்டிருக்கிறேன்.

சளி, தொண்டை வலி, ஜீரணக்கோளாறு உள்ளிட்ட பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு ஒரு சாக்லேட் தீர்வாக இருக்கும் என்றால் விட்டுவைக்கலாமா? அதிலும் 1 ரூபாய்க்கு உடலின் பிரச்சனைகள் நீங்கும் என்றால் ஏன் அதை மிஸ் பண்ணவேண்டும்? அந்த வரிசையில் இந்தக் கடைகளில் தூதுவளை, சுக்கு, ஓமம், சோம்பு, வல்லாரை, 8 மருத்துவ குணங்கள் நிறைந்த அஷ்ட சூரணம் மிட்டாய் என அத்தனை வகையான சாக்லேட்டுகள் உள்ளன.

அடுத்ததாகத் தலைமுடி வளர்ச்சிக்கு மிகவும் சிறந்த எண்ணெய்கள் இங்குக் கிடைக்கும். இப்போது உள்ள காலகட்டத்தில், தலைமுடி உதிர்வு பெரும் பிரச்சனையாக உள்ளது. இதனை எளிதில் கடக்க நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் தூய்மையான செம்பருத்தி, மருதாணி, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய் என இந்த வகையான எண்ணெய்களை வாங்கி உபயோகிக்கலாம். உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கு ஏற்றபடி தேவையான எண்ணெய்களைத் தேர்ந்தெடுத்துக் கலந்து பயன்படுத்தலாம். அப்படி இல்லையென்றால், வெட்டிவேர், ஆவாரம்பூ உள்ளிட்டவை தனியே பாட்டில்களில் உள்ளன. அதனுள் சாதாரண எண்ணெய் ஊற்றி உபயோகிக்கலாம். வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தினாலே போதும்.

அதேபோல தாய்ப்பால் அதிக சுரக்க வைக்கும் பிரசவ லேகியம், மலச்சிக்கலைச் சரிசெய்யும் கற்கண்டு மற்றும் தேனில் ஊறவைத்த ரோஜா இதழ்கள் (குல்கந்து) ஆகியவை மிகவும் குறைந்த விலையில் இருக்கின்றன. அதுமட்டுமின்றி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல சிக்கலான பிரச்சனைகளுக்கான தீர்வாக இருக்கும் அதிமதுரம், முடக்கத்தான், கடுக்காய், அஸ்வகந்தா உள்ளிட்ட பொடிகளும் உள்ளன.

அந்தக் காலத்தில் உணவே மருந்து, மருந்தே உணவு என்று இருந்தார்கள். அவற்றை இப்போதுதான் நான் புரிந்துகொண்டு, அதனைப் பின்பற்றவும் ஆரம்பித்திருக்கிறேன். உங்கள் வீட்டுப் பக்கத்தில் நிச்சயம் ஒரு நாடு மருந்துக் கடையாவது இருக்கும். பாரம்பரியத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பியுங்கள். குறைந்த செலவில் ஏராளமான பலன்கள் நிச்சயம் உண்டு”.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Serial actress neelima rani viral youtube video tamil news

Next Story
இன்ஜினியரிங் டூ ஆக்டிங்… திருமகள் அஞ்சலி லைஃப் ட்ராவல்!harika saadu, thirumagal serial
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com