Advertisment

பாடிகார்ட் முனீஸ்வரருக்கு இந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா? - நீலிமா ராணி கோவில் விசிட்!

Serial Actress Neelima Rani visit to Bodyguard Muniswaran Temple முதலில் தமிழன் குலதெய்வமான முனீஸ்வரனுக்கு வெள்ளிக்கிழமையில் படைத்துவிட்டு, மூன்றாம் நாளில் அம்பாளுக்குக் கூழ் ஊற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Serial Actress Neelima Rani visit to Bodyguard Muniswaran Temple Youtube Channel

Serial Actress Neelima Rani visit to Bodyguard Muniswaran Temple Youtube Channel

Serial Actress Neelima Rani visit to Bodyguard Muniswaran Temple Youtube Channel : ஆடி மாதம் வந்துவிட்டது. அம்மனுக்குக் கூழ் ஊற்றுவது, வெள்ளிக்கிழமை பூஜை என பக்திமயமான இந்த மாதத்தில், தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பாடிகார்ட் முனீஸ்வரர் கோவிலுக்குச் சென்ற வீடியோவைப் பதிவேற்றம் செய்திருக்கிறார் நீலிமா ராணி.

Advertisment
publive-image

"கொரோனா ஒரு பக்கம் இருந்தாலும், இறைவன் மேல் இருக்கும் அன்பு குறையவில்லை. நம்மை முக்கியமாகப் பயணம் செய்பவர்களைப் பாதுகாக்கும் பாடிகார்ட் முனீஸ்வரர் கோவிலுக்குத்தான் வந்திருக்கிறேன். இந்தக் கோவிலில் இருக்கும் முனீஸ்வரருக்கு ஏன் பாடிகார்ட் முனீஸ்வரர் என்று பெயர் வந்தது என்பதற்குப் பல காரணங்கள் உண்டு.

publive-image

இந்த கடவுளுக்கு முதலில் பால் முனீஸ்வரர் என்றுதான் பெயர் இருந்தது. ஆனால், இந்தக் கோவிலுக்கு வலது பக்கத்தில் பஸ் பாடி பில்டிங் இடமும் இடது பக்கத்தில் மிலிட்டரி கேம்ப் பாடி கட்டுமான இடமும் இருப்பதனால், நாளடைவில் இந்தக் கோவிலை பாடிகார்ட் என்று குறிப்பிட ஆரம்பித்திருக்கின்றனர் என்று சில சொல்வது உண்டு. அதேபோல முதலில் இந்தக் கோவில் மிலிட்டரி கேம்ப் உள்ளே இருந்தது. ஆனால், அங்குப் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்பதால் கோவிலை வெளியே வைத்துவிட்டனர்.

publive-image

அதேபோல இப்போதுதான் இந்த சாலை பெயர் பல்லவன் சாலை என்றும், ஆங்கிலேயர் காலத்தில் இதன் பெயர் பாடிகார்ட் லேன் என்று அழைத்ததாகவும் அதனால்தான் இந்த கோவிலுக்கு பாடிகார்ட் முனீஸ்வரர் பெயர் வந்தது என்றும் சில நம்புவது உண்டு. இதுபோல ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.

publive-image

பொதுவாக ஆடி மாதத்தில் அம்மனுக்குத்தான் படைத்தது கூழ் ஊற்றுவார்கள். ஆனால், இங்கு முனீஸ்வரர் கோவிலில் அவ்வளவு கூட்டம். அதற்குக் காரணம், முதலில் தமிழன் குலதெய்வமான முனீஸ்வரனுக்கு வெள்ளிக்கிழமையில் படைத்துவிட்டு, மூன்றாம் நாளில் அம்பாளுக்குக் கூழ் ஊற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

publive-image

அதேபோல இந்தக் கோவிலுக்குள் முனீஸ்வரரின் மனைவி காட்டேரி அம்மன் மற்றும் அவர்களின் காவலாளிகள் சப்த கன்னிகள் இருக்கின்றனர். இந்தக் கோவிலில் நம் வாகனங்களுக்குப் பூஜை செய்தால், விபத்து எதுவும் ஏற்படாது என்பது நம்பிக்கை. அப்படியே விபத்து ஏற்பட்டாலும், மனிதர்களுக்கு எதுவும் ஆகாது என்றும் கூறுகின்றனர்.

இங்கு இருசக்கர வாகனங்களுக்கு ஒருவிதமான பூஜையும், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒருவிதமான பூஜையும் செய்யப்படுகின்றன. நம்முடைய பூஜைக்குக் கருப்பு கயிறு, தேங்காய், வாழைப்பழம், டாஷ்போர்டில் வைக்க எலுமிச்சை இருக்கின்றன. இது கருப்பு கயிறு இல்லை முடி என்பதுதான் இப்போதுதான் தெரியவந்தது. இதனை சாமி சன்னதியில் வைத்து பூஜை செய்து தருவதால் மிகவும் சக்திவாய்ந்தது" என்று நிறைவு செய்தார் நீலிமா.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neelima Rani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment