தக்காளி, சர்க்கரை வச்சு முகத்துல இப்படி... சரும பொலிவுக்கு சீரியல் நடிகை பார்வதி பியூட்டி டிப்ஸ்!
முகத்தை இன்ஸ்டன்ட் பொலிவாக மாற்றுவதற்கு சிம்பிளான டிப்ஸை சீரியல் நடிகை பார்வதி தெரிவித்துள்ளார். வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு இந்த எளிமையான ஃபேஸ்பேக்கை தயாரிக்க முடியும்.
சரும பராமரிப்பில் முதலிடம் வகிப்பது முகத்தை பொலிவாக வைத்திருப்பது என பலரும் கருதுகின்றனர். அதிலும், ஏதேனும் முக்கிய விழாக்கள் அல்லது நிகழ்வுகள் இருக்கும்பட்சத்தில் நம் முகம் காண்பதற்கு கூடுதல் பொலிவாக இருக்க வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்கும் இருக்கும்.
Advertisment
இதற்காக நினைத்த நேரத்தில் எல்லாம் பியூட்டி பார்லருக்கும் நம்மால் செல்ல முடியாது. மேலும், கடைகளில் இருந்து வாங்கும் ஃபேஸ் கிரீம்களை பயன்படுத்தினால் ஒவ்வாமை ஏற்பட்டு விடுமோ என்ற தயக்கமும் சிலருக்கு இருக்கும். வேறு சிலர் திரைப் பிரபலங்கள், சீரியல் நடிகைகள் ஆகியோரது சரும பராமரிப்பை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணமும் கொண்டிருப்பார்கள்.
அந்த வகையில் சீரியல் நடிகை பார்வதி, சிம்பிளான ஃபேஸ் கேர் டிப்ஸை குறிப்பிட்டுள்ளார். இதனை மொத்தம் மூன்று பகுதிகளாக பிரித்து செய்ய வேண்டும். ஆனால், இதனை பின்பற்றுவதற்கு சுலபமாக இருக்கும். குறிப்பாக வீட்டில் இருக்கக் கூடிய பொருட்களைக் கொண்டு இதனை செய்யலாம்.
ஒரு சிறிய துண்டு தக்காளியை வெட்டி சர்க்கரையில் ஒட்டி எடுக்க வேண்டும். இப்படி செய்தால் பார்ப்பதற்கு ஸ்க்ரப் போன்று மாறிவிடும். இதனை முகத்தில் வைத்து நன்றாக தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் டெட் செல்கள் ஆகியவை நீங்கி விடும்.
Advertisment
Advertisements
இதையடுத்து முகத்தை கழுவி விடலாம். பின்னர் 10 நிமிடங்கள் கழித்து, சிறிய துண்டு உருளைக் கிழங்கை வெட்டி முகத்தில் மீண்டும் தேய்க்க வேண்டும். இதையும் 10 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இதன் பின்பு ஃபேஸ் பேக் தயாரிக்க வேண்டும்.
கடலை மாவு, தயிர், அரிசி மாவு, சிறிதளவு உருளைக் கிழங்கு சாறு மற்றும் தக்காளி சாறு ஆகியவற்றை பசை பதத்திற்கு கலக்க வேண்டும். இவற்றை நம் முகத்திற்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம். இந்த ஃபேஸ்பேக்கை முகத்தில் தேய்த்து விட்டு, 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இப்படி செய்தால் நம் முகம் பொலிவாக மாறிவிடும் என சீரியல் நடிகை பார்வதி தெரிவித்துள்ளார்.
நன்றி - IBC Mangai
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.