விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே. இதில், மலர்விழி வெற்றிவேல் வேடத்தில் நடித்த நடிகை பவித்ரா ஜனனிக்கு, இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் புகழையும், ரசிகர்களையும் தேடித் தந்தது.
இந்த சீரியலைத் தொடர்ந்து தற்போது பவித்ரா, தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் அபிநயா என்னும் கேரக்டரில் நடிக்கிறார். அதில் இவருக்கு ஜோடியாக சுந்தரி நீயும், சுந்தரன் நானும் சீரியல் புகழ் வினோத்பாபு நடிக்கிறார்.
விஜய் டிவியில் தினமும் மதியம் ஒளிபரப்பாகும் இந்த சீரியல், அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
அதில் அபிநயா பிரபல நீதிபதியின் மகள், அமெரிக்கா சென்று படித்தவர். தப்பு நடந்தால் தைரியமாக தட்டிக்கேட்கும் பெண். ஆனால் கலாச்சாரங்களை நம்பக்கூடியவள்.
அதனால், தன் அனுமதி இல்லாமல், தன் கழுத்தில் தாலி கட்டியவனை காவல்நிலையத்தில் பிடித்துக் கொடுக்காமல், மஞ்சள் தாளி செண்டிமெண்டுடன் வாழ்ந்து வருகிறார்.
அவளுடைய கணவனும் ஒரு லோக்கல் ரவுடி. இப்போது தெரிந்தோ, தெரியாமலோ அபிநயாவின் கழுத்தில் தாலி கட்டிவிட்டதால் வேறுவழியில்லாமல் அவளுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறான்.
இப்போது அபிநயா அவளுடைய கணவனை திருத்தி, நல்லவனாக மாற்றி சமுதாயத்தில் நான்கு பேர் மதிக்கும்படியாக செய்ய வேண்டும். இதுதான் இந்த சீரியலின் களம்.
இந்த சீரியலில் அபியாக நடிக்கும் பவித்ராவுக்கு பிறந்தநாள். இதனை முன்னிட்டு அவர் தன் சீரியல் நண்பர்களுடன் வெளியே சென்று ஜாலியாக ஆடி, பாடி என்ஜாய் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
சீரியலில், அவருக்கு அண்ணியாக நடிக்கும், சம்யுக்தா கிரன் தான் இந்த சர்ப்ரைஸ் பார்ட்டியை ஏற்பாடு செய்துள்ளார். அப்போது எடுத்த வீடியோவை இன்ஸ்டாவில் பவித்ராவை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
அதில் ”பிறந்தநாளுக்கு முன் நான் உங்களுக்குக் கொடுக்கும் சிறந்த பரிசு இது!
நீங்கள் உங்களை கண்டுபிடித்தீர்கள், நீங்கள் நடனமாடினீர்கள், சில நல்ல நண்பர்களை உருவாக்கினீர்கள், சிறந்த பயணத்தை மேற்கொண்டீர்கள், நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தீர்கள், மேலும் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க நான் ஒரு கூடுதல் மைல் செல்வேன் என்பது உங்களுக்குத் தெரியும்!! அந்த அனுபவத்தை உங்களுக்கு கொடுக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று அதில் சம்யுக்தா பதிவிட்டுள்ளார். அதற்கு பவித்ரா, உங்கள் கிஃப்ட் எனக்கு ரொம்ப பிடித்தது என்று கூறியிருக்கிறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஏற்கெனவே பவித்ரா சக சீரியல் நடிகைகளுடன், ஹிமாச்சல், மணலிக்கு டூர் சென்ற புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்தார். அப்போது தான் இந்த பிறந்தநாள் பார்ட்டியும் நடந்துள்ளது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், பவித்ராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“