பிரணிகா தக்ஷு ஒரு இணைய நட்சத்திரம், மாடல் மற்றும் சீரியல் நடிகை. சில தமிழ் குறும்படங்களில் நடித்தவர், பிரதாப் ஜனாவின் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான கால் கிலோ காதல் என்ற குறும்படத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தார்.
பிரணிகா அறம் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி உள்ளார்.
டிக் டாக் செயலியில் மிகவும் பிரபலமானவர். பின்னர் இந்திய அரசாங்கம் அதை தடை செய்த போது, இன்ஸ்டாகிராமில் கணக்கை தொடங்கி ரீல்ஸ்களை பதிவிட்டு வந்தார். உனக்கென்னபா யூடியூப் சேனலின் வலைத் தொடரான ஹலோவிலும், நடித்திருந்தார். இனி ஒரு காதல் செய்வோம் மற்றும் வடசேரி ஆகிய படங்களிலும் பிரணிகா நடித்துள்ளார்.
இருந்தாலும் அவருக்கு புகழைத் தேடித் தந்தது விஜய் தொலைக்காட்சி தான். பாவம் கணேசன் சீரியலில், அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது. அந்த சீரியலில், அவர் நேஹா கவுடாவின் தங்கையாக ஸ்ரீமதி எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் காமெடி ராஜா கலக்கல் ராணி ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் வினோத் பாபுவின் ஜோடியாக பங்கேற்று காமெடியில் அசத்தினார். இப்போது கனா காலங்கள் சீரியலில் பள்ளி மாணவியாக நடிக்கிறார்.
சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரணிகாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு, பிரணிகா, இன்ஸ்டாகிராமில் தனது தாய்க்கு ஒரு அற்புதமான குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், ”இன்று உங்கள் நாள். இன்று உங்கள் நாள், ஏனென்றால் 364 நாட்களும் நீங்கள் அதை எங்கள் நாளாக ஆக்குகிறீர்கள். ஒரு தாயால் மட்டுமே செய்யக்கூடிய வழிகளில், நீங்கள் எங்கள் ஒவ்வொருவரையும் தன்னலமின்றி கவனித்துக்கொள்கிறீர்கள். மேலும் அவர்களின் வாழ்வில் தங்களுக்கு மிகவும் அர்த்தமுள்ள பெண்ணை உலகம் பார்க்கும்போது, நான் உன்னைப் பார்க்கிறேன் அம்மா, கொண்டாடத் தகுதியான ஒருவரைப் பார்க்கிறேன்.
உங்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள். தினமும் எனக்கு அன்னையர் தினம் என்றாலும், இந்த நாள் கொஞ்சம் உங்களை மகிழ்விக்க அதிக காரணத்தை அளிக்கிறது!!!!
பிரணிகா தக்ஷூ பகிர்ந்த இந்த இன்ஸ்டா போஸ்ட் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“