/tamil-ie/media/media_files/uploads/2021/05/Prs1up.jpg)
Serial Actress Preethi Sanjiv Youtube Channel Review Tamil News
Serial Actress Preethi Sanjiv Youtube Channel Review Tamil News : நடனம், நடிப்பு, வீடு என பிசியாக இருப்பவர் ப்ரீத்தி சஞ்சீவ். தற்போது 'கண்ணான கண்ணே' தொடரில் வாசுகியாக அனைவரையும் மிரட்டிக்கொண்டிருக்கிறார். தற்போதைய காலகட்டத்தில் பிரபலங்கள் பலரும் தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஆரம்பித்து அதிலும் தங்கள் முகத்தை மக்களுக்குப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வரிசையில் ப்ரீத்தி சஞ்சீவும் இணைந்திருக்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/05/Prs2.png)
'ப்ரீத்தி சஞ்சீவ்' என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த சேனலில் விதவிதமான ரெசிபி வீடியோக்கள்தான் அதிகம். பாச்சிலர்களுக்கான எளிய ரெசிபிக்கள், கோவிட் காலகட்டத்தில் உடலுக்கு நன்மை தரும் கஷாயம் ரெசிபி, வித்தியாசமான போர்ன்விட்டா பணியாரம், ஸ்பானிஷ் உணவு வகைகள், பிரியாணி வகைகள் என வித்தியாசமான ரெசிபிக்கள் இந்த சேனலில் ஏராளம்.
/tamil-ie/media/media_files/uploads/2021/05/Prs3.png)
4 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த சேனலில் முதல் வீடியோ, தன் சிறு வயதில் நடனமாடிய கானொலிதான். அதன்பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகுதான் ப்ரீத்தியின் சேனல் ஆக்டிவாகியிருக்கிறது. தன்னிடம் இருக்கும் புடவை கலெக்ஷன், தன் நடன வகுப்பு மாணவர்களைப் பற்றிய காணொளி, சுற்றுலா Vlog, கிஷ்ணஜெயந்தி, பொங்கல், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைக் கால கொண்டாட்ட காணொளிகள், கண்ணான கண்ணே ஷூட்டிங் ஸ்பாட் கொண்டாட்டம் என ஏராளமான ஃபன் வீடியோக்களும் உள்ளன.
சமீபத்தில் 1 லட்ச சப்ஸ்க்ரைபர்ஸ்களை எட்டியிருக்கும் இவருடைய சேனலுக்கு, சில்வர் பட்டன் கிடைத்துள்ளது. அதனை மக்களோடு பகிர்ந்துகொண்ட வீடியோ அதிக லைக்ஸ்களையும் வாழ்த்துகளையும் அள்ளியது. மேலும், இவருடைய சேனலில் ஏராளமான காணொளிகள் லட்சக்கணக்கில் வியூஸ்களை பெற்றிருக்கின்றன. விரைவில் 1 மில்லியன் வியூஸ் மற்றும் சப்ஸ்க்ரைபர்ஸ் இவருடைய சேனலுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.