“பத்தாவது படிக்கிற பொண்ணு இருக்கானு கேப்பாங்க” – பிரியா பிரின்ஸ் பியூட்டி சீக்ரெட்ஸ்!

Serial Actress Priya Prince Beauty Secrets வெளிப்புறத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவிற்கு உணவு முறையும் அவசியம்.

Serial Actress Priya Prince Beauty Secrets Fitness Tips Tamil
Serial Actress Priya Prince Beauty Secrets Fitness Tips Tamil

Serial Actress Priya Prince Beauty Secrets Fitness Tips Tamil : செய்தி வாசிப்பாளராகத் திரை வாழ்க்கையைத் தொடங்கி, தற்போது பல சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார் பிரியா பிரின்ஸ். அதிலும் குறிப்பாக ‘தமிழ் கடவுள் முருகன்’ எனும் பக்தி தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ‘பசங்க’ திரைப்படத்தில் வெள்ளித்திரையிலும் தோன்றிய அவருக்கு பத்தாவது படிக்கும் மகள் இருக்கிறார் என்று சொன்னால்  நம்பவே மாட்டார்கள். அந்த அளவிற்கு இளமையாகத் தன்னை வைத்துக்கொண்டிருக்கும் பிரியா, தன்னுடைய பியூட்டி சீக்ரெட்டுகளையும் அவருடைய தனிப்பட்ட யூடியூப் சேனலில் பகிர்ந்திருக்கிறார்.

“சருமம்தான் நம் உடலிலேயே மிகப்பெரிய உறுப்பு. அதனைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். சுருக்கம், பருக்கள், வடுக்கள் என சருமத்தில்தான் அதிகப்படியான பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இவை சரிசெய்யக்கூடியவைதான். அதற்கு முகத்தை எப்பொழுதும் அழுக்கு பாடியவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம்.

நிறையபேர் மேக்-அப் போட்டு அதனை அகற்றாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். உங்களிடம் மேக்-அப் ரிமூவர் இல்லையென்றால், 2 சொட்டு தேங்காய் எண்ணெய் அதனோடு 2 சொட்டு தண்ணீர் கலந்து முகத்தை சுத்தம் செய்யலாம். அடுத்ததாக வெறும் தேங்காய் எண்ணெய்யை காட்டனில் நனைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் ஊறவிடுங்கள். பிறகு தண்ணீரில் கழுவுங்கள்.

அதற்கு பிறகு இரவு நேர சீரம் அப்லை செய்யுங்கள். அப்படியில்லை என்றால் மாய்ஸ்ச்சரைசர் போதும். நம்முடைய சருமத்திற்கு நிச்சயம் மாய்ஸ்ச்சர் அவசியம். அதிலும் இரவு நேரங்களில் உங்கள் முகம், கை, கால், மற்றும் உள்ளங்காலில் தேய்த்து உறங்கினால், நிச்சயம் உங்கள் சருமத்தில் மாற்றத்தை உணர்வீர்கள்.

முகத்தில் எது பயன்படுத்தினாலும், நன்கு மசாஜ் செய்வது முக்கியம். பெரும்பாலும் தேங்காய் எண்ணெய் அல்லது தேங்காய்ப் பால், அது சம்பந்தப்பட்ட க்ரீம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தலாம். அதேபோல போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் முக்கியம். வெளிப்புறத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவிற்கு உணவு முறையையும் சரியானதாக மாற்ற வேண்டும்”.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Serial actress priya prince beauty secrets fitness tips tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com