Serial Actress Producer Neelima Rani Youtube Channel Review Tamil News
Serial Actress Producer Neelima Rani Youtube Channel Review : சின்னதிரையில் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி இன்றுவரை தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருப்பவர் நீலிமா ராணி. தற்போது எந்த சீரியலிலும் ஆக்டிவாக இல்லை என்றாலும், தன்னுடைய தனிப்பட்ட யூடியூப் சேனல் மூலம் தன் ரசிகர்களை என்டெர்டெயின் செய்துகொண்டிருக்கிறார். லட்சக்கணக்கில் வியூஸ்களை அள்ளும் இவருடைய சேனலில் என்னென்ன ஸ்பெஷல்?
Advertisment
'நீல்ஸ்' என்பதுதான் இவருடைய சேனலின் பெயர். வழக்கம்போல இவருடைய சேனலில் Vlog காணொளிகள்தான் அதிகம். ஆரம்பித்து 4 மாதங்கள்தான் ஆகிறது ஆனால், பெரும்பாலான வீடியோக்கள் லட்சக்கணக்கில் வியூஸ்களை பெற்றிருக்கின்றன. Vlogs மட்டுமின்றி, 'சகோ' எனும் லிரிக்கல் மற்றும் வீடியோ பாடலையும் வெளியிட்டிருக்கிறார். இந்தப் பாடலை பாடியிருப்பவர் பின்னணி பாடகி சைந்தவி. இந்த வீடியோ மக்களிடத்தில் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
Advertisment
Advertisements
நீலிமாவின் காஸ்டியூம்களுக்கென்றே தனிப்பட்ட வகையில் ரசிகர்கள் உண்டு. அந்த வரிசையில் தன்னுடைய புடவை கலெக்ஷனை காணிலெயாகப் பதிவு செய்தார். நான்கு லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களை பெற்று, இன்றும் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, தன்னுடைய முதல் டாட்டூ, தலைமுடி டிரான்ஸ்ஃபர்மேஷன் என சில வித்தியாச வீடியோக்களையும் பதிவு செய்திருக்கிறார்.
பெண்கள் தின சர்ப்ரைஸ் என தன் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்களை ஷாப்பிங் மால் கூட்டிச் சென்று அவர்களை மகிழ்வித்து அப்லோட் செய்திருந்த காணொளி லைக்ஸ்களை அள்ளியது. அதேபோல தன் மகள் பிறந்தநாள் மற்றும் அன்னையர் தின வீடியோ மக்கள் ஃபேவரைட் லிஸ்டில் இணைந்தது.
என்னதான் ஹோம் டூர், ஹாண்ட்பேக் அலசல் உள்ளிட்ட காணொளிகள் அப்லோட் செய்தாலும், தற்போது மக்களின் சாய்ஸ் என்னவோ ஃப்ரிட்ஜ்தான். நீலிமா வீட்டு ஃப்ரிட்ஜ் டூர் வீடியோவை 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் ரசித்திருக்கின்றனர். மேலும், சில வித்தியாச உணவு ரெசிபி வீடியோக்களும் இவருடைய சேனலில் உள்ளன. வெறும் சமையல் குறிப்பு மட்டுமின்றி, உடல்நல பலன்களையும் இணைத்தே கூறுவார். விரைவில் 1 லட்ச சப்ஸ்க்ரைபர்ஸ்களை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil