Advertisment

’சின்னத் தம்பி’ மலருக்கு இத்தனை வயசு தானா?

சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி பன் அன்லிமிடேட் நிகழ்ச்சியில் ராமருக்கு ஜோடியாக நடனமாடினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rhema Ashok

Rhema Ashok

Serial Actress Rhema : விஜய் டிவி-யில் ஒளிபரப்பான சின்னத் தம்பி சீரியலில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரீமா அசோக்.

Advertisment

இவர் 2015-ம் ஆண்டு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘களத்து வீடு’ என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி, றெக்கை கட்டி பறக்குது மனசு ஆகிய தொடர்களிலும் நடித்தார்.

மதுரையை பூர்விகமாக கொண்ட இவருக்கு இப்போது தான் 20 வயது. 16 வயதிலேயே ’கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரில் நடித்திருந்தார். சிறு வயதிலேயே நடனத்தை கற்றுத்தேர்ந்தவர். இதனால் ஒரு சில நடன நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி பன் அன்லிமிடேட் நிகழ்ச்சியில் ராமருக்கு ஜோடியாக நடனமாடினார்.

தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பொன் மகள் வந்தாள்’ சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு சவுத் இந்தியன் உணவுகள் என்றால் அத்தனை பிரியமாம். அதோடு வாட்டர் கேம்ஸ் என்றால் பொழுது போவது கூட தெரியாமல் விளையாடிக் கொண்டே இருப்பாராம்.

 

 

Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment