Serial Actress Rhema Ashok Skin Care Tips Tamil News : நடனக் கலையில் கைதேர்ந்த ரேமா அசோக், நடிப்பிலும் கெட்டிக்காரர். ‘ஓடி விளையாடு பாப்பா’, ‘ஜோடி நம்பர் 1’ என நடன போட்டியில் பங்கேற்று, பின்னாளில், ரெக்க கட்டி பறக்குது மனசு, சின்ன தம்பி, சரவணன் மீனாட்சி, கல்யாணம் முதல் காதல் வரை உள்ளிட்ட பல தொடர்களிலும் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியிருக்கிறார். அவர் தினமும் பின்பற்றும் அனைவர்க்கும் உபயோகமாகும் சரும பராமரிப்பு வழிமுறைகள் இதோ…

“முதலில் நடிகைக்கெல்லாம் பளபளன்னு சருமம் இருக்கும் என்பதெல்லாம் உண்மையல்ல. அத்தைதான் மக்கள் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். நாங்களும் சாதாரண மனிதர்கள்தான். எங்களுக்கும் பருக்கள், வடுக்கள் எல்லாமே இருக்கும். ஆனால், மற்றவர்களைவிட சருமத்தை அதிகளவு பராமரிக்கிறோம். வெளிப்புற மேக்-அப் மட்டுமல்லாமல், அதிக கவனம் கொண்டு காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உட்கொள்வதினால் சருமம் மேலும் பளபளப்பாகிறது.

என்னைப் பொறுத்த வரை அனைவரும் க்ளென்ஸ் செய்வது முக்கியம். சருமத்தில் இருக்கும் அழுக்கு, நிற மாற்றம் போன்றவற்றை நீக்க க்ளென்சிங் அவசியம் செய்யவேண்டும். அதேபோல சோப் பயன்படுத்துவதை விட ஃபேஸ் வாஷ் பயன்படுத்தலாம். கற்றாழை ஜெல் சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்ச்சரைசர். இதனை எப்போது வேண்டுமானாலும் அப்ளை பண்ணலாம். வீட்டிலேயே வளர்த்து, இயற்கையான ஜெல்லை சருமத்திற்கு அப்ளை செய்யலாம்.

சிலர், தங்களுக்கு எண்ணெய் சருமம்தானே என்று மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்க மாட்டார்கள். ஆனால், எந்த சருமமாக இருந்தாலும் மாய்ஸ்ச்சரைஸிர் மிகவும் முக்கியம். நீங்கள் தேர்வு செய்யும் பிராண்டில் கவனம் தேவை. சில மாய்ஸ்ச்சரைஸர் க்ரீமியாக இருக்கும். சில பொருள்களை சருமம் ஈர்த்துக்கொள்ளும். இதுபோன்ற பொருள்களை உபயோகிக்கலாம்.

அதேபோல இயற்கையான சிறந்த டோனர், ரோஸ் வாட்டர். இது சருமத்தை எப்போதும் ஃபிரெஷாக வைத்திருக்கும். மேக்-அப் அகற்றுவதற்கு க்ரீம் ரிமூவரை விட எண்ணெய் ரிமூவர்தான் சிறந்தது. அதற்கு சிறந்த ஆப்ஷன் தேங்காய் எண்ணெய்தான். முடிந்த அளவிற்கு இயற்கை பொருள்களைக்கொண்டே உங்கள் சருமத்தை மேலும் மெருகேற்றலாம்”.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil