/indian-express-tamil/media/media_files/2025/08/20/serial-actress-sahana-2025-08-20-11-59-17.jpg)
Serial actress Sahana
இப்போதைய ஃபேஷன் உலகில், ஆடைகள் என்பவை வெறுமனே அணிவதற்கானவை மட்டுமல்ல, அவை நம்முடைய உணர்வுகள், நினைவுகள், அன்புக்குரியவர்களுடனான பிணைப்பு என எல்லாவற்றையும் வெளிப்படுத்தும் கண்ணாடி. அப்படி சீரியல் நட்சத்திரம் சஹானா, தனது உடைத் தேர்வுகளையும், அவற்றுக்குப் பின்னால் உள்ள சுவாரசியமான கதைகளையும் இந்த வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார்.
மிஸ் வொவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டி இதோ
என் கல்யாண பட்டுப் புடவை
சின்ன வயசுல இருந்தே எனக்கு ஒரு ஆசை, கல்யாணத்துக்கு கண்டிப்பா மெரூன் கலர் புடவைதான் கட்டணும்னு. சிலர் அதை 'பழைய ஃபேஷன்'னு சொன்னாலும், நான் என் முடிவில் உறுதியாக இருந்தேன். பொதுவாக, நான் ஆடைகளுக்கு அதிகமா செலவு பண்ண மாட்டேன். ஆனா, என் கல்யாணத்துக்குன்னு அம்மா ₹25,000 பட்ஜெட் கொடுத்தாங்க. ஆனால், நான் எடுத்த சேலை வெறும் ₹17,000 மட்டும்தான்!
பாட்டியின் நினைவாய் ஒரு உடை
என்னோட பாட்டிக்கு நான் ரொம்ப செல்லம். அவங்க மேல எனக்கு இருக்கிற அன்புக்கும் பாசத்துக்கும் அளவே இல்லை. என் குழந்தை பிறப்பதற்கு அஞ்சு நாளுக்கு முன்னாடி பாட்டி இறந்துட்டாங்க. இப்பவும் என் பாட்டி நினைப்பு வரும்போதெல்லாம் மனசு கனமா ஆகிடும். சமீபத்தில் ஒரு ஷூட்டிங்கிற்காக என்னோட பாட்டியோட புடவையில இருந்து ஒரு 'ஹாஃப்-சாரி' தைச்சேன். அதை நான் அணிஞ்சிருக்கும்போது, பாட்டி என் கூடவே இருக்குற மாதிரி ஒரு உணர்வு.
வெஸ்டர்ன் ஆடைகள் என் சாய்ஸ்!
பொதுவா, நான் சௌகரியமான ஆடைகளைதான் விரும்புவேன். அதனால ஜீன்ஸ், டி-ஷர்ட்ன்னு வெஸ்டர்ன் ஆடைகள் தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சினிமா துறைக்குப் பொருத்தவரை, ஒருமுறை அணிந்த உடைகளை மீண்டும் பயன்படுத்த மாட்டோம். அதனால, ரொம்பக் குறைந்த விலையில்தான் புடவைகளை வாங்குவேன். சிலசமயம் ஒரு புடவையை வெறும் ₹100க்குக் கூட வாங்குவேன். புதுச்சேரியில் ஒரு ஷூட்டிங் போனபோது, சாலையோரக் கடையில் ₹100க்கு ஒரு ஆடை வாங்கினேன். அது எல்லாருக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது!
இப்படி ஒவ்வொரு உடைக்கும் ஒரு கதை இருக்கு. ஆனா, என்னோட எல்லா உடையிலும், நான் நானாக, ரொம்ப எளிமையாக இருக்கணும்னு நினைப்பேன். இதுதான் என்னோட ஃபேஷன் ரகசியம்! என்கிறார் சஹானா.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.