முகத்தில் பருக்கள் இருக்குதா? அப்போ கடுக்காய் பொடியை இப்படி யூஸ் பண்ணுங்க! சீரியல் நடிகை சங்கீதா டிப்ஸ்
முகத்தில் இருக்கும் பருக்களை எவ்வாறு இயற்கையான முறையில் அகற்றுவது என சீரியல் நடிகை சங்கீதா தெரிவித்துள்ளார். இந்த முறையை தான் பின்பற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட வயதுக்கு மேல் இருக்கும் ஆண் மற்றும் பெண் என அனைத்து பாலினத்தவருக்கும் முகத்தில் பருக்கள் தோன்றும். சில காலங்களுக்கு பிறகு அவை மறைந்து விடும். ஆனால், சிலருக்கு அடிக்கடி பருக்கள் வந்து கொண்டே இருக்கும். மேலும், பருக்கள் இருந்த தடமும் முகத்தில் இருக்கும்.
Advertisment
இதனை எவ்வாறு போக்கலாம் என பல நேரங்களில் சிந்தித்து இருப்போம். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் இது போன்று பருக்களை போக்குவதற்கு நிறைய சிகிச்சை முறைகள் இருக்கின்றன. மேலும், பல்வேறு ஃபேஸ் க்ரீம் மற்றும் சீரம் போன்றவற்றையும் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
ஆனால், இவற்றை மேற்கொள்வதற்கு பலர் தயங்குவார்கள். இப்படி செய்வதால் ஏதேனும் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகள் ஏற்படுமோ என்கிற தயக்கம் நிறைய பேருக்கு இருக்கும். அதற்காக, இயற்கையான முறையை பின்பற்றலாம் என்று கருதுபவர்களும் உண்டு. அந்த வகையில் முகத்தில் இருக்கும் பருக்களை எவ்வாறு இயற்கையாக அகற்றலாம் என சீரியல் நடிகை சங்கீதா தெரிவித்துள்ளார்.
இதற்காக கடுக்காய் பொடியை, தான் தொடர்ந்து பயன்படுத்தியதாக நடிகை சங்கீதா தெரிவித்துள்ளார். இவை அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். கடுக்காய் பொடியை இரண்டு சிட்டிகை அளவு எடுத்து ரோஸ் வாட்டர் அல்லது சாதாரண தண்ணீரில் கலந்து பசை பதத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.
Advertisment
Advertisements
இப்படி செய்தால் சிம்பிளான ஃபேஸ்பேக் ரெடியாகி விடும். இதனை முகத்தில் தடவிவிட்டு சுமார் 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இவ்வாறு ஒரு மாதம் செய்தால் முகத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் அதன் தடம் ஆகியவை மறையும் என்று நடிகை சங்கீதா குறிப்பிட்டுள்ளார். பருக்களை நீக்க இயற்கையான முறையை தேர்ந்தெடுப்பவர்கள் இதனை பயன்படுத்தலாம்.
நன்றி - Sangeetha Says Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.