என்னை நம்புங்கள், இது உங்கள் வாழ்க்கையை மாற்றும்.. செம்பருத்தி ஷபானா சொல்லும் தத்துவம்!

ஷபானாவின் இன்ஸ்டா பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் “ஆமா நீங்கள் சொல்வது உண்மைதான். இனி நாங்களும் இந்த பழக்கத்தை கடைபிடிக்கிறோம் என கூறி வருகின்றனர்.

Shabana
Serial actress shabana recent insta message goes viral

செம்பருத்தி சீரியலில் பார்வதியாக நடித்து, ரசிகர்களை கவர்ந்தவர் ஷபானா. ஷபானாவும், பாக்கியலெட்சுமி சீரியலில் செழியனாக நடிக்கும் ஆர்யனும் கடந்த நவம்பரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென திருமணம் செய்து கொண்டனர்.

ஷபானா முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர், ஆர்யன் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் பெற்றோர் சம்மதமில்லாமல், திடீரென திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் மணமான ஒரு மாதத்துக்குள்ளே இவர்கள் குடும்ப வாழ்க்கையில் புயல் வீச தொடங்கியதாகவும், இருவரும் விவாகரத்துக்கு நெருங்கி விட்டதாகவும் ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியானது. 

இப்படி இருக்க, கிறிஸ்துமஸ் அன்று, ஷபானா, ஆர்யனுடன் சேர்ந்து எடுத்த போட்டாவை பகிர்ந்து, விவகாரத்து குறித்து வதந்திக்கு ஒட்டுமொத்தமாக சேர்த்து ஒரு பெரிய முற்றுப்புள்ளியை வைத்துள்ளார்.

இந்நிலையில் ஷபானாவின் மற்றொரு இன்ஸ்டா பதிவும் தற்போது சோஷியல் மீடியாவில் வைராகியுள்ளது.

ஷபானா எழுதிய அந்த பதிவில், ”தினமும் நேர்மறையான உறுதிமொழிகளை எழுதும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா ??

இல்லை என்றால், தயவு செய்து எழுதத் தொடங்கவும்.

உறுதிமொழிகள் சில விஷயங்களில் செயல்பட, உங்களைத் தூண்டும் சக்தியைக் கொண்டுள்ளன, வாழ்க்கையில் உங்கள் இலக்குகளை அடைவதில் கவனம் செலுத்த உதவுகின்றன, உங்கள் எதிர்மறை சிந்தனைகளை’ நேர்மறை சிந்தனைகளால் மாற்றுவதற்கான சக்தியை உங்களுக்கு வழங்கும், புதிய நம்பிக்கை முறையை அணுக உங்களுக்கு உதவுகின்றன. ,

எல்லாவற்றிற்கும் மேலாக இது உங்கள் ஆழ் மனதை மீண்டும் உருவாக்க உதவுகிறது.

என்னை நம்புங்கள், இது வாழ்க்கையை மாற்றும் செயல்முறை.

ஆல் தி பெஸ்ட்

என ஷபானா பதிவிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவை இதுவரை கிட்டத்தட்ட 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். அதைப் பார்த்த ஷபானாவின் ரசிகர்கள் பலரும் “ஆமா நீங்கள் சொல்வது உண்மைதான். நாங்களும் அதை நம்புகிறோம்.. இனி நாங்களும் இந்த பழக்கத்தை கடைபிடிக்கிறோம் என இன்ஸ்டாவில் கூறி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Serial actress shabana recent insta message goes viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com