Serial Actress Srinithi Shocking information about her friend Nakshathra
யாரடி நீ மோகினி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீநிதி. இவர் தனது உயிர்த் தோழியான நக்ஷ்த்திரா குறித்து பேசிய விஷயங்கள் தான் இப்போது ஊடகங்களில் பரபரப்பாகி உள்ளது.
Advertisment
விஜே சித்து எனக்கு நல்ல பிரெண்டு. அவ பாய் பிரெண்டோட இருக்கும்போது என்னோட பிரெண்ட்ஸ்லாம் அவகிட்ட பேச சொன்னாங்க. ஆனா, நான் எதுவும் சொல்லல. ஏன்னா ஒருத்தங்க லவ் பண்ணும்போது நம்ம கண்ணுக்கு அவங்க மட்டும்தான் தெரிவாங்க, மத்தவங்க என்ன சொன்னாலும் கேட்காது.
டிசம்பர் 8 என் பிறந்தநாள், நான் செலிபிரேட் பண்ணிட்டு இருந்தேன். அப்போ எனக்கு சித்து இறந்து போயிட்டா கால் வந்தது. என் வாழ்க்கையிலேயே அதுதான் ரொம்ப மோசமான நாள். அப்போதான் நம்ம ஒரு தடவ சித்துக்கிட்ட பேசி இருக்கலோமோ கஷ்டமா இருந்தது. அப்போ இருந்தே எனக்கு பயம். என் ஃபிரெண்ட்ஸ்லாம் பாதுகாப்பான ரிலேஷன்ஷிப்ல இருக்கனும். அப்படி ஒரு நல்ல ரிலேஷன்ஷிப்ல இல்லன்னா, நம்ம பேரு எவ்வளவு கெட்டுபோனாலும் பரவாயில்ல. எப்படியாவது அதை தடுக்கணும். இல்லன்னா ஒரு நாள் அவங்க இந்த உலகத்துல இருக்கமாட்டாங்க.
அதனால தான் நக்ஷ்த்திரா விஷயம் என்ன ரொம்ப பாதிச்சது. நானும் அவளும் ஒரே வீட்டுலதான் இருந்தோம். அவ நிறைய தப்பு பண்ணி இருக்கா. அதுக்காக தப்பான பொண்ணு கிடையாது. அவளுக்குப் பெரிய நடிகையா எல்லாம் ஆகனும் ஆசை கிடையாது. எல்லா பொண்ணுங்க போலவும் கல்யாணம் ஆகி குடும்பம், குழந்தைனு செட்டில் ஆக ஆசைப்பட்டா. அப்படி இருக்கும் போதுதான் ஒருத்தரை பாத்தா. ரொம்ப நல்லவரா இருக்காருனு சொல்லி நான்தான் அவளுக்கு அறிமுகம் கொடுத்தேன். ஒரே மாசத்துல அவங்க பேசி கல்யாணம் வரைக்கும் வந்துட்டாங்க. திடீர்னு கடந்த நவம்பர் மாசம் அவளுக்கு நிச்சயதார்த்தம் வச்சுட்டாங்க. அவளுடைய தங்கச்சியை கூட கூப்பிடல. இதைப்பத்தி மாப்பிள்ளை வீட்டுல விசாரிக்கும்போது மாப்பிள்ளை அம்மா என்னை அடிக்க வந்துட்டாங்க. அன்னைக்கு தான் என் வாழ்க்கையிலேயே ரொம்ப அழுத நாள்.
Advertisment
Advertisements
ஆனா நான் நட்சத்திரா மேல ரொம்ப பொறாமையா இருக்கேன், அவளுக்கு நிறையக் கெட்ட விஷயங்கள் பண்றேனு தப்பு தப்பா அந்த மாப்பிள்ளை வீட்டுல என்ன பத்தி பேசினாங்க.. நட்சத்திரா யார் மேலயும் கோபப்படமாட்டா.
ஆனா அவளை, அந்த பையனோட ஃபேமிலி பயங்கரமாக இப்போ லாக் பண்ணிட்டாங்க. 'சீக்கிரமா கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க. அவளுக்கு இப்போ 2 லட்சம் சம்பளம் வந்துட்டு இருக்கு. ஆனா அக்கவுன்ட்ல இப்ப பத்தாயிரம் கூட இல்லாத நிலைமைல தான் இந்த பையனோட ஃபேமிலி அவளை வச்சிருக்கு.
நட்சத்திரா பத்தி அவ அம்மாகிட்டயே தப்பா பேசி இருக்காங்க. என்னோட மொபைல் நம்பரையும் லாக் பண்ணிட்டாங்க. நிலைமை இப்படியே போச்சுனா எங்க போய் முடியும்னு தெரியல. இது எங்க கூட இருக்குற எல்லாருக்குமே தெரியும். நட்சத்திரா அம்மாவும் அவளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும்னு நம்பி பொறுமையா போயிட்டு இருக்காங்க.
இதெல்லாம், இப்ப நான் ஏன் சொல்லிட்டு இருக்கேன்னா, விஜே சித்ராவுக்கு இப்படி தான் சரியான வாழ்க்கை அமையாமல் அவளுடைய வாழ்க்கையே முடிஞ்சு போச்சு.
சித்ரா ஹஸ்பண்ட் பத்தி அவங்க பிரெண்ட்ஸ் நிறைய பேருக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தும் அவங்க ஸ்ட்ராங்கா எடுத்து சொல்லாததால தான் அந்த மாதிரி ஆச்சு. அந்த மாதிரி நக்ஷ்த்திராவுக்கு நடக்கணும்னு நான் விரும்பல. அதனாலதான், இதெல்லாம் சொல்லிட்டு இருக்கேன்.
சீக்கிரமா, நக்ஷ்த்திராவ விடலனா நான் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுப்பேன்' என அந்த லைவ்-வில் ஸ்ரீநிதி பேசியிருக்கிறார்.
ஸ்ரீநிதி இப்படி பேசியது இப்போது ஊடகங்களில் பரபரப்பாகி இருக்கிறது.
&t=367s
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“