scorecardresearch

பாலில் விளக்கெண்ணெய், பிட்சா, பர்கருக்கு தடை – ஷியாமந்தா கிரண் பியூட்டி சீக்ரெட்ஸ்!

Serial Actress Syamantha Kiran Beauty Secrets Tamil News எனக்கு தைராய்டு, பிசிஓடி பிரச்சனைகள் இருந்தபோதிலும், சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கிறது.

Serial Actress Syamantha Kiran Beauty Secrets Tamil News
Serial Actress Syamantha Kiran Beauty Secrets Tamil News

Serial Actress Syamantha Kiran Beauty Secrets Tamil News : கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட சில தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஷியாமந்தா கிரண். மாடலிங் துறையிலும் கலக்கிக்கொண்டிருந்தவர், சமீபத்தில் சரும பராமரிப்பிற்கு அவர் பின்பற்றும் சில எளிய வழிமுறைகளைப் பகிர்ந்துகொண்டார். இதில் அதிகப்படியான கெமிக்கல் கலந்த பியூட்டி பொருள்கள் எதுவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“நாம் சிறு வயதில் இருந்து உட்கொள்ளும் உணவுகள்தான் நம்முடைய ஆரோக்கியமான சருமத்திற்கும் கூந்தலுக்கும் காரணமாக அமையும். எனக்கு பிட்சா, பர்கர் போன்ற உணவு வகைகள் எல்லாம் நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போது தான் சாப்பிட்டேன். அதுவரையிலும் வீட்டு உணவுகள் மட்டும்தான். அதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும்.

நம் உடலில் நோயெதிர்ப்பு சக்தி எப்படி ஒரு நாளில் உருவாகுவது இல்லையோ, அதேபோல்தான் ஆரோக்கியமான சருமமும் ஒரே நாளில் உருவாகப்போவதில்லை. நீங்கள் உட்கொள்ளும் உணவுகளை பொறுத்துத்தான் உங்கள் சருமம் பதிலளிக்கும். உதாரணத்திற்கு, உங்கள் வயிற்றில் ஏதாவது கோளாறு இருந்தால்தான் முகத்தில் பருக்கள் ஏற்படும். அதனால், வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம்.

இதற்கு நான் சிறிய வயதிலிருந்து பின்பற்றுவது, விளக்கெண்ணெய்யைப் பாலில் கலந்து குடிப்பதுதான். இது, உடலில் இருக்கும் அனைத்து கெட்ட கிருமிகளையும் அழிக்க உதவும். அதேபோல, தலைக்கு நன்கு எண்ணெய் தேய்த்து, பின்னலிட்டு, ஊறவைத்து பிறகுதான் தலைக்குக் குளிப்பேன். இதுபோன்ற பாரம்பரிய முறைகளைப் பின்பற்றினாலே போதுமானது. எனக்கு தைராய்டு, பிசிஓடி பிரச்சனைகள் இருந்தபோதிலும், சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கிறது. இதற்கு நான் அதிகம் எடுத்துக்கொள்வது ஆயுர்வேத மருந்துகள்தான்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Serial actress syamantha kiran beauty secrets tamil news

Best of Express