scorecardresearch

புடவை, சுடிதார், கேஷூவல், வெஸ்டர்ன்.. எப்படி பார்த்தாலும் அழகு தான்! வாணி போஜன் பியூட்டிஃபுல் கிளிக்ஸ்!

சின்னத்திரை நயன்தாரா என்று அன்புடன் அழைக்கப்பட்ட நடிகை வாணி போஜன், ஒரு சீரியல் நடிகையாக இருந்து, தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார்.

Vani Bhojan
Serial actress to cinema star Actress Vani Bhojan cute photos

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் வாணி போஜன்.

சின்னத்திரையில் சத்யாவாக நடித்து நம்மை கட்டிப்போட்ட வாணி, இப்போது சினிமாவில் ஒரு ஜொலிக்கும் நட்சத்திரமாக இருக்கிறார்.

ஒருமுறை டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியின் போது, சின்னத்திரை நடிகையாக இருந்து, திரைப்படங்களில் நடிக்கும் அனுபவம் குறித்து வாணி போஜன் பேசினார். என்னன்னு கீழே பாருங்க!

என்னைப் பொறுத்தவரை, தொலைக்காட்சி பெரியது. நடிகையாக நான் பெயர் பெற்ற இடம் அது. ஆனால், திரைப்படங்கள் வித்தியாசமான அனுபவம்.

குறுகிய காலத்தில் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கலாம், டிவி சீரியல்களில் அப்படி இல்லை, ஒரு கதாபாத்திரம் ஐந்து வருடங்களுக்கு தொடரும்.

நீங்கள் அறிமுகமானதில் இருந்து முதிர்ந்த பாத்திரங்களில் நடித்து வருகிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த வாணி; ஹீரோவை சுற்றியே அதிக நேரத்தை செலவிடும் அந்த வழக்கமான ஹீரோயின் கேரக்டரில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. ஒரு நடிகையாக எனக்கு சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன் என்று கூறினார்.

வாணி போஜன், சமூக ஊடகங்களிலும் சுறுசுறுப்பாக இருக்கிறார்.

அதில் அடிக்கடி தனது படங்களை ரசிகர்களுடன் பகிர்கிறார். ஓய்வு நேரத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார்.

வாணி போஜன் கடைசியாக அர்சில் மூர்த்தி இயக்கிய ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ படத்தில் துணை வேடத்தில் நடித்தார்.

இப்போது பரத் நடிக்கும் 50வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். மேலும் சில படங்கள் அவர் கைவசம் உள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Serial actress to cinema star actress vani bhojan cute photos