Advertisment

காலை இழந்தபோதும், கலையை இழக்கவில்லை - சுதா சந்திரனின் இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி!

நம்பிக்கையை இழக்காத சுதா சந்திரன், காலை அகற்றிவிட்டு, ஜெய்ப்பூரில் செயற்கை காலைப் பொருத்திக் கொண்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
serial artist Sudha Chandran

Sudha Chandran

Serial Artist Sudha Chandran : நடனக் கலைஞர், சீரியல் நடிகை, நடன நிகழ்ச்சிகளின் நடுவர் என சுதா சந்திரனை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இவற்றை அடைய அவர் கடந்து வந்த பாதை மிகவும் கரடு முரடானது.

Advertisment

நடனத்திற்கு மிக முக்கியம் கால்கள் என்ற கற்பிதம் தான் காலம் காலமாக நம்மிடையே புகுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் சுதா சந்திரனோ, சின்ன வயதிலேயே அதை இழந்தவர். நடனத்திற்கு மனம் இருந்தால் போதும், என்பதை ஆழமாக பதித்தவர். மும்பையில் பிறந்து வளர்ந்தாலும், இவரது பூர்வீகம் தமிழகம் தான். சுதாவுக்கு 3 வயது இருக்கும்போதே அவருக்குள் இருந்த நடனத் திறமையை கண்டறிந்த அவரது பெற்றோர், முறையாக பயில நடன வகுப்புகளுக்கு அனுப்பினர். அரங்கேற்றம் முடித்த அவர், நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடத் தொடங்கினார்.

serial artist Sudha Chandran சுதா சந்திரன்

பின்னர் மகிழ்ச்சியாக சென்றுக் கொண்டிருந்த சுதா சந்திரனின் வாழ்வில் புயல் வீசத் தொடங்கியது. 1981-ல் புனிதா யாத்திரை சென்றிருக்கும் போது, அவர் திருச்சி அருகே விபத்து ஒன்றை சந்தித்தார். இதனால் வலது காலின் ஒரு பகுதியை இழக்க நேரிட்டது. நம்பிக்கையை இழக்காத சுதா சந்திரன், காலை அகற்றிவிட்டு, ஜெய்ப்பூரில் செயற்கை காலைப் பொருத்திக் கொண்டார். அத்துடன் தனது நடன பயணத்தையும் நிறுத்தவில்லை. ’கால் இல்லாம, இந்த கால வச்சிக்கிட்டு எப்படி ஆடுவ’ என்ற பலரின் கேள்விகளுக்கு, தனது நடனத்தின் மூலமே பதிலடி கொடுத்தார். முன்பை விட இன்னும் உத்வேகத்துடன் நடனத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

serial artist Sudha Chandran கோப பாவனையில் சுதா சந்திரன்

இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பா, கனா, மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் என பல்வேறு நாடுகளிலும் தனது நடனத்தை அரங்கேற்றினார். இதற்கிடையே எம்.ஏ படித்து முடித்த சுதா சந்திரனுக்கு, 1984-ம் ஆண்டு வெளி வந்த ’மயூரி’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்தப் படம் இவரது சொந்த வாழ்க்கையையே அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டிருந்தது . அதோடு 1986-ம் ஆண்டு ’நாச்செ மயூரி’ என்ற பெயரில் இந்தியிலும் ரீ மேக் செய்யப்பட்டது. இதற்காக தேசிய திரைப்பட விருதுகளில் சிறப்பு ஜூரி விருதையும் சுதா சந்திரன் பெற்றார்.

serial artist Sudha Chandran சுதா சந்திரன்

திருமணத்திற்குப் பிறகு சின்னத்திரைக்குள் நுழைந்த சுதா சந்திரன், பல மொழி சீரியல்கள், நடன நிகழ்ச்சியில் நடுவர் என 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்.

 

Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment