பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
இந்தியாவில் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கும் யூனியன் பிரதேசமாக புதுச்சேரி இருந்து வருகிறது. இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் சுற்றுலாவுக்காக வருகிறார்கள். அப்படி வருபவர்களில் பலர் தங்களுக்கு தெரிந்த வேலைகளை செய்து கொண்டு புதுச்சேரி ஆரோவில் பகுதியில் வசித்து வருகின்றனர்.
அந்த வகையில், ரஷ்யாவை சேர்ந்த செர்க்கேவின் குடும்பம் புதுச்சேரி ஆரோவில் பகுதியில் வசித்து வருகின்றனர். செர்க்கே தனது மனைவி தான்யா மற்றும் மூன்று குழந்தைகளுடன், ஆரோவில்லில் வசித்து, அதே பகுதியில் உள்ள, ஆட்டோ மொபைல் பணிமனையில், வேலை செய்கிறார். அவரது குடும்பம், கார் மற்றும் டூவீலரில் பயணிக்காமல், ஆரோவில்லில் இருந்து புதுச்சேரிக்கு, ரிக்ஷாவில் பயணம் செய்து வருகிறார்கள்.
வெயிலோ மழையோ தாக்காத வகையில் மேல் கூரை, பக்க வாட்டில் தடுப்பு திரை என வடிவமைக்கப்பட்டுள்ள ரிக் ஷாவை, செர்க்கே எத்தனை கிலோ மீட்டர் தூரமாக இருந்தாலும், அவரே மிதித்து ஓட்டி சென்று வருகிறார். இது, அப்பகுதியில் வசிக்கும் அனைவரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“