Advertisment

வாரத்திற்கு இத்தனை முறை எள்ளு… ரொம்ப முக்கியம்: மிஸ் பண்ணாதீங்க

எள்ளில் அதிக நன்மைகள் இருக்கிறது. இதில் புரத சத்து, நார்சத்து, வைட்டமின் பி, கால்சியம், இரும்பு சத்து, மெக்னீஷியம், சிங்க் உள்ளது. குளிர் காலத்தில், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

author-image
WebDesk
New Update
sdaa

எள்ளில் அதிக நன்மைகள் இருக்கிறது. இதில் புரத சத்து, நார்சத்து, வைட்டமின் பி, கால்சியம், இரும்பு சத்து, மெக்னீஷியம், சிங்க் உள்ளது. குளிர் காலத்தில், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Advertisment

ஆயுர்வேத முறைப்படி, எள்ளு சூடு தன்மை கொண்டது. இதனால் குளிர்காலத்தில் நாம் இதை சாப்பிடலாம். இதில் அதிக கலோரிகள் இருப்பதால், அதிக சக்தி கொடுக்கும்.

சிங்க் சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்நிலையில் எள்ளில் சிங்க் சத்து உள்ளது. குளிர் காலத்தில் வரும் நோய்களுக்கு எதிராக இது உடலை காப்பாற்றுகிறது.

இதில் ஆரோக்கியமான கொழுப்பு சத்து, மோனோசாச்சுரேடட் மற்றும் பாலிசாச்சுரேடட் கொழுப்பு உள்ளது. இந்த கொழுப்பு சத்து சருமத்தின் நன்மைக்கு உதவுகிறது. குளிர்காலத்தில் சரும வரட்சி அதிகரிக்கும். மேலும் இது உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ராலை கொடுக்கிறது.

இதில் அதிக கால்சியம் உள்ளது. இந்நிலையில் உடலில் உள்ள எலும்புகளின் ஆரோகியத்திற்கு இது மிகவும் முக்கியம். மேலும் இதை நாம் தொடர்ந்து சாப்பிடுவதால் எலும்பு வலுவாகும். இதனால் வாரத்திற்கு 3 முறை எள்ளை  நாம் எடுத்துகொள்ள வேண்டும்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment