தென் இந்தியாவில் பிரபலமான செட் தோசை மற்றும் பென்னே தோசை ஆகிய 2 வகை உணவுகள் நாடு முழுவதும் பேசப்படுகிறது. பிரபல சமையல் கலைஞரான அனன்யா பானர்ஜி, இந்த இரண்டின் முக்கிய வேறுபாடுகளை பற்றி கூறுகிறார்.
செட் தோசை: இவை பொதுவாக மென்மையாக, சிறிய அளவில் மற்றும் மொத்தமாக இருக்கும். இவை மூன்று தோசை ஒன்றாக அடுக்கி வழங்குவதால் இது செட் தோசை எனப் பெயர் பெற்றது.
தட்டையான அரிசி மாவில் செய்யப்படுகிறது. இது மென்மையாகவும் பஞ்சுபோன்றதாகவும் இருக்கும். காய்கறி குழம்பு மற்றும் தேங்காய் சட்னியுடன் பரிமாறப்படுகின்றன.
பென்னே தோசை: கன்னடத்தில் பென்னே என்றால் "வெண்ணெய்" என்று பொருள், மற்றும் பென்னே தோசை அதன் மிருதுவாக, கோல்டன் நிறத்தில் இருக்கும். இது பொதுவாக மெல்லியதாகவும், விளிம்புகளில் லேசியாகவும் இருக்கும். சுவைக்காக இது
எண்ணெய்க்கு பதிலாக வெண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
கர்நாடகாவில் உள்ள தாவாங்கேரேவில் பிரபலமானது, பென்னே தோசை ஒரு தனித்துவமான நறுமணத்தைக் கொண்டுள்ளது மற்றும் பெரும்பாலும் காரமான உருளைக்கிழங்கு பல்யா மற்றும் தேங்காய் சட்னியுடன் பரிமாறப்படுகிறது.
எது ஆரோக்கியமானது?
பானர்ஜியின் கூற்றுப்படி, செட் தோசை பெரும்பாலும் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் அது மென்மையானது, குறைந்த வெண்ணெய் அல்லது எண்ணெயைப் பயன்படுத்துகிறது. அதோடு இதில் போஹா அதில் உள்ளது, இது அதன் மென்மையான அமைப்புக்கு பங்களிக்கிறது. மாவு தடிமனாக இருக்கும், குறைந்த அளவு கொழுப்பு உள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: How does Set dosa differ from Benne dosa? We found which one is healthier
இது பென்னே தோசையுடன் ஒப்பிடும்போது கலோரிகள் மற்றும் கொழுப்பில் குறைவாக உள்ளது. வெண்ணெய் சேர்த்த, பென்னே தோசையில் கொழுப்புகள் மற்றும் கலோரிகள் அதிகம். இது ருசியாக இருந்தாலும், இது செட் தோசையை விட அதிக கொழுப்பு உள்ளிட்டவை உள்ளது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“